'நீதி கிடைக்கவில்லை' - தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய வேங்கைவயல் மக்கள்!

Apr 23, 2026 - 15:01
 0
'நீதி கிடைக்கவில்லை' - தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய வேங்கைவயல் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதி பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் எனும் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிராக குரல் கொடுத்திருந்தனர். இந்த வழக்கு சிபிசிடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேங்கை வயல்
வேங்கை வயல்

பலரிடமும் டி.என்.ஏ சோதனையும் செய்யப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று நபர்களை போலீசார் சந்தேகப்பட்டனர்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

அதோட இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

வேங்கைவயல் சம்பவம் நடந்து மூன்று வருடங்களாகியும் இதுவரை யார் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை என்பது அந்த பகுதி மக்களுக்கு கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வேங்கை வயல்வேங்கை வயல் மக்கள் புறக்கணிப்பு
வேங்கை வயல் மக்கள் புறக்கணிப்பு

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை என்பதால் வேங்கைவயல் பகுதி பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0