Jailer 2: 'அதில் பெரிய ஈடுபாடு இல்லை'; 'பாட்ஷா' டு 'பேட்ட' - ரஜினியின் சீக்குவல் திட்டங்கள்!

Oct 12, 2026 - 17:30
0
Jailer 2: 'அதில் பெரிய ஈடுபாடு இல்லை'; 'பாட்ஷா' டு 'பேட்ட' - ரஜினியின் சீக்குவல் திட்டங்கள்!

ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வாரம் வெளியாகிறது. 'ஜெயிலர்' முதல் பாகம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

அந்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். முதல் பாகத்தில் வந்திருந்த கதாபாத்திரத்தைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தில் பல புதிய கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அத்தோடு, பல சர்ப்ரைஸ் கேமியோக்களும் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Actress Mirna Menon - Jailer 2
Actress Mirna Menon - Jailer 2

ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டாவது சீக்வெல் திரைப்படம் 'ஜெயிலர் 2'தான். இதற்கு முன் '2.0' படம்தான் அவர் நடித்திருந்த ஒரே சீக்வெல் படமாக இருந்தது.

ஆனால், ரஜினிகாந்தின் பல்வேறு ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்டகால விருப்பமாக இருந்து வருகிறது.

'பாட்ஷா 2', 'படையப்பா 2', 'பேட்ட 2' என அவருடைய ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுகளும் நடந்திருக்கின்றன. ஆனால், இரண்டாம் பாகம் எடுப்பதில் ரஜினிக்குப் பெரியளவில் ஆர்வமில்லை என்பதை பல சமயங்களில் தெரியப்படுத்தியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த 'ஜெயிலர் 2' படத்தின் சூப்பர் ஷோ நிகழ்ச்சியிலும், "சீக்வெல் என்றாலே கிரியேட்டிவிட்டி குறைவாகி விட்டதாக எனக்குத் தோன்றும். ஏற்கெனவே செய்த விஷயங்களில் கொஞ்சம் காரம் சேர்த்துச் செய்வது போலதான் அது என நான் நினைப்பேன்.

ஆர்.எம். வீரப்பன் சாரும் நல்ல திரைக்கதை செய்து 'பாட்ஷா 2' பண்ணலாம் என்றார். ஆனால், அதில் எனக்கு ஈடுபாடு வரவில்லை. பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 'பேட்ட 2'வுக்கான ஐடியாவைச் சொன்னார்.

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை வைத்து அக்கதையை அமைத்திருந்தார். அந்த ஐடியாவும் நன்றாக இருந்தது. ஆனால், அதுவும் செய்யவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாட்ஷா திரைப்படம்
பாட்ஷா திரைப்படம்

கடந்த ஆண்டு ரஜினியின் 'படையப்பா' படம் ரீ-ரிலீஸ் ஆகியிருந்தது. அப்படம் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைக் காணொளி மூலமாகப் பகிர்ந்திருந்தார் ரஜினி. அப்போது அவர் 'படையப்பா 2' ஐடியா பற்றித் தெரிவித்திருந்தார்.

அதில் அவர் நீலாம்பரி கதாபாத்திரத்தை மையமாக வைத்து, அந்தப் படத்திற்கு 'நீலாம்பரி: படையப்பா 2' எனத் தலைப்பு வைக்கலாம் எனவும், அதற்குக்கதை சரியாக அமைந்தால் இரண்டாம் பாகம் செய்யலாம் என்பதையும் கூறியிருந்தார்.

மேலும், 'சந்திரமுகி 2' பற்றிப் பேச்சுகள் வந்தபோது, 2017-ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் பி. வாசு, "`சந்திரமுகி'யோட சீக்வெல் ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு.

ரஜினி சார் நடிச்சா, அதைப் பண்ணலாம்னு வெச்சிருக்கேன். பொறுத்திருப்போம்'' எனப் பகிர்ந்திருந்தார். பிறகு, 'சந்திரமுகி 2' ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியானது.

ரஜினியிடம் நீங்கள் எதிர்பார்க்கும் சீக்குவல் படம் என்னவென்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User