சூர்யகுமார் சாதனைக்கு எண்ட் கார்டு! பவர் பிளேயில் தனி சாம்ராஜ்யம்… சாதனைகள் படைத்த அபிஷேக் சர்மா!

Oct 12, 2026 - 17:30
0
சூர்யகுமார் சாதனைக்கு எண்ட் கார்டு! பவர் பிளேயில் தனி சாம்ராஜ்யம்… சாதனைகள் படைத்த அபிஷேக் சர்மா!

டி20 கிரிக்கெட்டில் சில வீரர்கள் களமிறங்கினாலே எதிரணியின் திட்டங்கள் மாறிவிடும்.

அந்த வகையில், பந்துவீச்சாளர்கள் எந்தப் பக்கம் பந்தை வீசுவது என்று யோசிப்பதற்குள், அதை எல்லைக்கோட்டுக்கு அனுப்பிவிடுவார் அபிஷேக் சர்மா.

இப்போது அவரது அதிரடி, ரன்களோடு மட்டும் நிற்கவில்லை இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவின் சாதனையையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது!

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா

1,024 பந்துகள்... 2,000 ரன்கள்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 30 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2,000 ரன்களைக் கடந்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த மைல்கல்லை எட்ட அவர் எடுத்துக்கொண்டது வெறும் 1,024 பந்துகள்தான்.

இதற்கு முன்பு இந்தச் சாதனை சூர்யகுமார் யாதவ் வசம் இருந்தது. அவர் 1,164 பந்துகளில் 2,000 ரன்களைக் கடந்திருந்தார். இப்போது அவரைவிட 140 பந்துகள் குறைவாக எடுத்துக்கொண்டு, பந்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறார் அபிஷேக்.

பவர் பிளே... அபிஷேக்கின் பவர் ஷோ!

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை சிக்ஸர்களால் திணறடித்த அபிஷேக் சர்மா, 2026-ம் ஆண்டில் இதுவரை 68 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம், ஒரே காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சூர்யகுமார் யாதவின் சாதனையைச் சமன் செய்து அசத்தியிருக்கிறார்!

இதுமட்டுமல்ல வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், முதல் ஓவரின் கடைசிப் பந்தில் அடித்த சிக்ஸர் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் முதல் ஓவரில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 14 ஆனது.

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா

இதுவரை தலா 13 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்த அயர்லாந்தின் பால் ஸ்டெர்லிங், வெஸ்ட் இண்டீஸின் எவின் லூயிஸ் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி, இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் அபிஷேக் சர்மா.

இப்படி ஒவ்வொரு ஆட்டத்திலும் புதிய சாதனைகளை நோக்கி நகரும் அபிஷேக் சர்மாவின் அதிரடி, இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுக்கிறது. இது போன்று இன்னும் எத்தனை சாதனைகள் படைப்பார் என்பதுதான் இப்போது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User