மெட்டல் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை - அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் புதிய சாதனை!

Oct 12, 2026 - 19:30
0
மெட்டல் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை - அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் புதிய சாதனை!

திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில், அக்டோபர் 7 ஆம் தேதி மெட்டல் ஸ்டென்ட் (Metallic Stent) பொருத்தாமல், மருந்து பூசப்பட்ட பலூன் (#Drug-Coated Balloon – DCB) மூலம் இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு சிகிச்சை அளிக்கும் நவீன முறையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன சிகிச்சை முறையின் மூலம், ஒரே நாளில் நான்கு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக Metal-Free PCI சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சாதனை தமிழகத்தில் இத்தகைய சிகிச்சை முறையின் வளர்ச்சியில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Cardiac Care
Cardiac Care

நவீன சிகிச்சையின் சிறப்பம்சங்கள்

1. பொதுவாக இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது, அந்தக் குழாயைத் திறந்து வைக்க மெட்டல் ஸ்டென்ட் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த நவீன சிகிச்சையில் மருந்து பூசப்பட்ட பலூன் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தேவையான நோயாளிகளுக்கு நிரந்தர உலோக ஸ்டென்ட் பொருத்தாமல் சிகிச்சை அளிக்க முடியும்.

2.அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் ஒரே நாளில் நான்கு நோயாளிகளுக்கு இந்த நவீன சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மருத்துவமனையின் இதய சிகிச்சைத் திறனையும் நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.

3.நோயாளியின் இதய ரத்தக் குழாய்களின் நிலை, அடைப்பின் தன்மை மற்றும் உடல்நிலை ஆகியவற்றை மதிப்பீடு செய்த பிறகு, அவர்களுக்கு ஏற்ற சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது. மருந்து பூசப்பட்ட பலூன் சிகிச்சை, பொருத்தமான சில நோயாளிகளுக்கு மாற்று சிகிச்சை வாய்ப்பாக அமைகிறது.

4. 127-க்கும் மேற்பட்ட Metal-Free PCI சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இத்துறையில் மருத்துவமனை பெற்றுள்ள அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.

அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை
அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை

மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் E. அருணாசலம், இந்த நவீன சிகிச்சை முறையின் செயல்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்தச் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு தென் தமிழக மக்களுக்கு எளிதில் கிடைப்பது, மருத்துவமனையின் முக்கிய நோக்கமாகும். என்று குறிப்பிட்டார்.

இதய சிகிச்சைத் துறையில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, பொருத்தமான நோயாளிகளுக்கு மெட்டல் ஸ்டென்ட் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் புதிய வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதில் அருணா கார்டியா கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சொர்ணலதா அருணாச்சலம் & டாக்டர். அருணாச்சலம் மற்றும் அருணா கார்டியா காேர்யின் இருதய சிகிச்சை டாக்டர்கள் கலந்து கொண்டனர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User