`அந்தக் குழந்தை நட்சத்திரமா இவர்?' - ஆச்சர்யப்பட்ட ஜெயராம் - நினைவுகளை பகிர்ந்து கொண்ட பரத்!

Jun 03, 2026 - 18:01
0
`அந்தக் குழந்தை நட்சத்திரமா இவர்?' -  ஆச்சர்யப்பட்ட ஜெயராம் - நினைவுகளை பகிர்ந்து கொண்ட பரத்!

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து நடித்திருக்கும் 'பரிமளா & கோ' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் 'லப்பர் பந்து' சஞ்சனா, அனந்திகா, சாண்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்காக சினிமா விகடன் சேனலின் பிரத்யேக விகடன் பிரஸ் மீட் நிகழ்வில் கலந்துகொண்டார் நடிகர் ஜெயராம்.

‘பரிமளா & கோ' படத்தில்...
‘பரிமளா & கோ' படத்தில்...

அவருடன் பயணித்த நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்கள் பலரும் காணொளி வாயிலாக ஜெயராமுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

அந்த வகையில் 'பஞ்சதந்திரம்' திரைப்படத்தில் ஜெயராமுக்கும், ஊர்வசிக்கும் மகனாக நடித்திருந்த பரத், காணொளி மூலம் ஜெயராம் உடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

பரத் பேசுகையில், "குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த முதல் திரைப்படமான 'நைனா' படத்துல நான் ஜெயராம் சார்கூட நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல ஒரு காட்சியில யானை வச்சு ஒரு சீன் எடுக்கணும். 'ஹீரோ ஜெயராம் சார் படப்பிடிப்புக்கு அவருடைய யானையைக் கொண்டு வர்றேன்'னு சொன்னதாக சொன்னாங்க.

அப்போ நான் 'யானையை ஒருத்தர் வளர்ப்பாங்களா'னு ஆச்சர்யமாக பார்த்தேன். பிறகு, ஜெயராம் சாருக்கும், ஊர்வசி ஆன்ட்டிக்கும் மகனாக நான் நடிச்சிருக்கேன். ஜெயராம் சார் இன்னும் நிறைய படங்கள்ல ஹீரோவாக நடிக்கணும்.

சினிமாவுக்கு அவர் தேவை. மக்களுக்கு என்டர்டெயின்மென்ட் தரக்கூடிய அவருடைய நகைச்சுவையும் தேவை" என்றார்.

பரத்தை சிறு வயதில் பார்த்ததால், அவர் யாரென்று நடிகர் ஜெயராம் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. பிறகு, 'பஞ்சதந்திரம்' படத்தில் தன்னுடைய மகனாக நடித்த பரத்தான் இவர் என்பது தெரிந்ததும் ஆச்சர்யப்பட்டுப்போனார்.

பரத் காணொளியைப் பார்த்தவர், "முதல்ல யார் அதுனு எனக்கு தெரியல. ஏதோ இயக்குநர்னு நினைச்சுட்டேன். ஆனா, பிறகுதான் 'பஞ்சதந்திரம்'ல என்னுடன் நடிச்ச பரத்தான் அதுனு தெரிஞ்சது. அந்தப் படத்துக்குப் பிறகு நான் அவரை மீட் பண்ணவே இல்லை. பயங்கரமா மாறிட்டார்!" என உற்சாகத்துடன் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User