``மக்களை ஏமாற்றுவதற்கான RSS-BJP அமைப்பின் Plan B தயாராகிறதா?”- மாணிக்கம் தாக்கூர் சொல்வது என்ன?

Jun 05, 2026 - 12:02
0
``மக்களை ஏமாற்றுவதற்கான RSS-BJP அமைப்பின் Plan B தயாராகிறதா?”- மாணிக்கம் தாக்கூர் சொல்வது என்ன?

தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்து, பின் அரசியலில் முக்கியப் புள்ளியாக மாறியவர் அண்ணாமலை. இவர் தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதை தலைமையும் ஏற்றுக்கொண்டது.

ராஜினாமா செய்வதற்கு முன்பு, டெல்லி சென்று தலைமையை சந்தித்து இருந்தார். அதைத் தொடர்ந்து, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியானது. 'தமிழக மக்கள் கழகம்' அல்லது 'தமிழக மக்கள் கட்சி' என்ற பெயரையே அண்ணாமலை கையில் எடுக்க வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா?

அண்ணாமலை
அண்ணாமலை

அமித் ஷாவின் அனுமதியுடன், மோடியின் ஆசீர்வாதத்துடன், BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி. பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம். கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா? தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “Plan B” ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது. இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள். முகமூடி மாறலாம். ஆனால் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம். Plan B is ready for Tamilnadu. RSS behind it . Beware of them." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User