ஈரான் அமைதி ஒப்பந்தம் முடிவாகிறதே... ஹார்முஸ் நீர்ச்சந்தி எப்போது திறக்கப்படும்? சுங்க வரி உள்ளதா?
ஈரானில் போர் தொடங்கியது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், உலக நாடுகளை நேரடியாகப் பாதித்த ஒன்று - ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்.
இதனால், எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 115 டாலர்களை எல்லாம் தாண்டியது.
தற்போது ஈரான் அமைதி ஒப்பந்தம் வருகிற ஜூன் 19-ம் தேதி கையெழுத்தாகிறது என்று முடிவாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் அனைத்து உலக நாடுகளின் ஃபோக்கஸும் - ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தான்.

எப்போது திறக்கப்படும்?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்பந்தம் குறித்த தனது சமூக வலைதளப் பதிவில், "வருகிற வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஹார்முஸ் நீர்ச்சந்தி மீண்டும் திறக்கப்படும்.
அதன் பிறகு இந்தப் பிராந்தியத்திற்கும், ஏன் ஒட்டுமொத்த உலகத்திற்குமே இரண்டு பக்கமிருந்தும் எண்ணெய் விநியோகம் மீண்டும் தடையின்றிப் பாயத் தொடங்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.
சுங்க வரி உள்ளதா?
ட்ரம்ப் அமெரிக்க நாளிதழான 'நியூயார்க் டைம்ஸிற்கு' கொடுத்துள்ள போன்கால் பேட்டியில், "ஈரான் உடனான ஒப்பந்தத்தில் ஹார்முஸ் நீர்ச்சந்தி நிரந்தரமாக இலவசமாகத் தான் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக, ஈரான் மற்றும் ஓமன் ஹார்முஸ் நீர்ச்சந்தி பயணத்திற்கு சுங்க வரி வசூலிக்காது என்று தெரிய வருகிறது.
இந்தப் பதில் எல்லாம் ட்ரம்ப் மற்றும் அமெரிக்கா தரப்பிடம் இருந்து மட்டுமே வருகிறது. ஈரான் இன்னும் எதையும் தெளிவுபடுத்தவில்லை என்பதை இதில் கவனிக்க வேண்டும்.!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)