Iran: "அதுவரை ஈரானைத் தாக்கமாட்டோம்" - ட்ரம்ப்பின் முடிவுக்குக் காரணம் என்ன?

Oct 09, 2026 - 13:30
0
Iran: "அதுவரை ஈரானைத் தாக்கமாட்டோம்" - ட்ரம்ப்பின் முடிவுக்குக் காரணம் என்ன?

ஈரான் போர் தொடங்கி இன்றோடு 7 மாதங்கள் 11 நாள்கள் ஆகின்றன.

பாதிப்புகள்...

இடையில் தற்காலிகப் போர் நிறுத்தம், பலகட்டம் மற்றும் பலதரப்புப் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தம் என ஆயிரம் முயற்சி நடந்தும், எதுவும் பலனளிக்கவில்லை.

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடியேதான் இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில்தான் இருக்கிறது. உலக நாடுகளில் பணவீக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைதூக்கி வருகிறது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் பதிவு

இந்த நேரத்தில், “நாங்கள் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஈரானின் பொருளாதாரமும் ராணுவமும் மிக மோசமான நிலையில் இருந்தாலும், அவர்கள் மீதான தடைகள் முழு வீச்சில் அமலில் இருக்கும் என்பதையும், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே கச்சா எண்ணெய் போக்குவரத்து சாதனை அளவை எட்டியிருக்கிறது என்பதையும் (நேற்று இரவு மட்டுமே 2.2 கோடி பேரல்கள், இதில் ஒரு பேரல் எண்ணெய் கூட ஈரானில் இருந்து வரவில்லை, ஈரானுக்கும் செல்லவில்லை!), எல்லோருக்கும் நான் தெளிவாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

தேதி

நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள மிட் டேர்ம் தேர்தலுக்கு முன்னதாக, எந்தச் சூழ்நிலையிலும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்.

ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெற முடியாது!” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்பின் இந்தப் பதிவு கச்சா எண்ணெய் விலைக்கு ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வருமா? மேலும், நவம்பர் 3-ம் தேதி வரை இதே நிலைபாட்டில் இருப்பாரா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User