"நான் வைபவிடம் பெரும்பாலும் கிரிக்கெட் குறித்து பேசமாட்டேன்; ஏன்னா.?"- ஸ்ரேயாஸ் ஐயர்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசியிருக்கிறார்.

"நான் வைபவிடம் பெரும்பாலும் கிரிக்கெட் அல்லாத விஷயங்களைப் பற்றித்தான் பேசுவேன்.
ஏனென்றால் எல்லோரும் அவரிடம் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.
அவரது குடும்பம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து பேசும்போது அவர் மிகவும் உற்சாகமாகவும் இயல்பாகவும் இருக்கிறார்.
மைதானத்திற்கு வெளியே மிகவும் அமைதியான நபராக இருக்கும் வைபவ், கையில் பேட்டை எடுத்துக்கொண்டு களமிறங்கும்போது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் ஆபத்தான வீரராக மாறிவிடுகிறார்.
தற்போது உலகக்கோப்பை வென்ற தொடக்க வீரர்கள் அணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த இடத்தில் தொடர்ந்து விளையாடுவதற்கு அவர்களுக்கு தகுதி உள்ளது.

வைபவுக்கு சரியான நேரம் வரும்போது, அவர் உலகையே அதிர வைப்பார்; இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)