"இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்..!"- சித்து எமோஷனல்

Sep 23, 2026 - 14:31
0
"இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்..!"- சித்து எமோஷனல்

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தி டார்க் ஹெவன்'.

இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சித்து, "இந்த மாதிரி ஒரு தருணத்தைப் பார்ப்பதற்கு எனக்கு 14 வருடங்கள் ஆகிவிட்டது. இதே சாலிகிராமத்தில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்து தான் சினிமா வாய்ப்பைத் தேடினேன்.

'தி டார்க் ஹெவன்'
'தி டார்க் ஹெவன்'

எல்லா சினிமா அலுவலகங்களுக்கும் என்னுடையப் புகைப்படத்தை எடுத்து சென்றிருக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய பயணம். இந்தத் தேடலில் நிறையப் பசியை நான் பார்த்திருக்கிறேன். அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் இந்தப் பட இயக்குநர் கூப்பிடுவார், நடிகர் கூப்பிடுவார், தயாரிப்பாளர் கூப்பிடுவார் என்று ஏங்கிய நாள்கள் அதிகம்.

என்னுடன் வாய்ப்பு தேடியவர்களின் படமெல்லாம் தியேட்டரில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும். அதைப் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தாலும் மனதில் ஒரு ஏக்கம் இருக்கும்.

எனக்கான நாள் என்றைக்கு வரும், நமக்கான வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கம் நிறைய நாள்கள் இருந்திருக்கிறது. தூக்கம் இல்லாத நாள்கள் எல்லாம் இருந்திருக்கிறது.

சித்து
சித்து

இன்றைக்கு இந்த 'தி டார்க் ஹெவன்' படம் மூலம் நான் ஆசைப்பட்ட விஷயங்கள் நடந்திருக்கின்றன. மக்கள் படத்தை தியேட்டருக்கு வந்து பார்ப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது எனக்கு ஒரு நல்ல ஆரம்பம். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User