'உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' - கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் குறித்து அருண்ராஜ்
சென்னையில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதில் அளித்த அவர், " இதுகுறித்து பலமுறை பேசிவிட்டோம். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் முதல்வரின் கவனத்தில் உள்ளது. ஆராயப்பட்டு உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் 'தவெக கட்சி சமூகத்திற்கே ஒரு நோய்' என்று விமர்சித்திருந்தார். இது குறித்து கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த அருண்ராஜ், " திமுக எந்த அளவுக்கு ஒரு பாசிச மனப்பான்மையோடு இருக்கிறது என்பதற்கு, திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சு காட்டுகிறது.
பாஜவை பற்றி நாம் குற்றச்சாட்டு வைத்தால், நாட்டுக்கே எதிரான குற்றச்சாட்டு என்பார்கள். திமுக பற்றி குற்றம்சாட்டினால், தமிழ் சமூகத்திற்கு எதிரானது என்கிறார்கள். எந்த விதத்தில் தவெக இந்த சமூகத்திற்கு ஒரு நோய் என்று சொல்லுகிறார்.
சட்டசபையில் எதிர்வரிசையில் இருப்பவர்களுக்கு மூளையே இல்லாதவர்கள் என்று உதயநிதி பேசியிருக்கிறார். எந்தவிதமான மனநிலை இது. திமுகவுக்கு ஓட்டுப்போட்டவர்கள் அறிவார்ந்த மக்களா? திமுகவுக்கு ஓட்டுப்போடாதவர்கள் முட்டாள்களா?
40 ஆண்டில் இல்லாத பெரிய அரசியல் புரட்சியை நாம் ஏற்படுத்தியுள்ளோம். திமுகவின் ஒவ்வொரு எம்எல்ஏவும், ரூ.50 கோடி செலவு செய்து விட்டு வந்துள்ளார்கள். இவர்கள்தான் அறிவாளிகளா? அவர்கள்தான் (திமுக) இந்த சமூகத்தின் நோய், சமூகத்தின் கேடு.
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட வேண்டும் என்று மக்களை பழக்கப்படுத்தி வைத்துள்ளார்களே, இதுதான் சமூகத்தின் மிகப்பெரிய கேடு. இதில் இருந்து மாற்றம் கொண்டு வந்துள்ளோம்.
கண்டிப்பாக, சில பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அடிப்படை காரணங்களை சரி செய்தால் தான் தீர்வு கிடைக்கும். போதைப்பொருள், போலீசாருக்கு முழு சுதந்திரம், பெண்கள் பாதுகாப்புக்கு தனி படை அமைத்துள்ளோம். எங்களின் நோக்கம் உண்மையானது" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)