ஹீரோ டு கேமரா ஆல் இன் ஆல் ஒரே ஆள்! 'ஒன் மேன்' விளம்பரத்துக்காகவா?- சங்ககிரி ராஜ்குமாரின் பதில் என்ன?

Aug 17, 2026 - 18:00
0
ஹீரோ டு கேமரா ஆல் இன் ஆல் ஒரே ஆள்! 'ஒன் மேன்' விளம்பரத்துக்காகவா?- சங்ககிரி ராஜ்குமாரின் பதில் என்ன?

தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, வில்லன், துணை நடிகர்கள், ஒளிப்பதிவாளர், வசனம் எனச் சினிமாவின் அத்தனை கிராஃப்டுகளையும் ஒரே ஆள் பண்ணி வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படம் 'ஒன் மேன்'.

தனி ஒரு ஆளாக இப்படியொரு படத்தை எடுத்திருப்பவர் 'வெங்காயம்', 'பயாஸ்கோப்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார்.

கூத்துக் கலையைக் குடும்பப் பின்னணியாகக் கொண்ட ராஜ்குமாரிடம் பேசினோம்.

சங்ககிரி ராஜ்குமார்
சங்ககிரி ராஜ்குமார்

''கூத்து ப்ளஸ் வெகு ஜனங்களைப் பெரியளவுல சுலபத்துல ரீச் பண்ணி விடுகிற சினிமா ரெண்டுலயுமே ஒரே நேரத்துல இயங்கிட்டிருக்கிறேன். கூத்துல பிரச்னை இல்லை. ஆனா சினிமாவுல ஜெயிச்சவங்களைக் காட்டிலும் தோத்தவங்கதான் அதிகம். அதனால அந்த ஏரியாவுல வித்தியாசமா அல்லது புதுசா ஏதாவது செஞ்சா மட்டுமே கவனம் பெற முடியுது. தொடர்ந்து பயணிக்கவும் முடியுது.

சினிமா மீது ஆர்வம் இருக்கிற அளவுக்குப் பொருளாதார வசதி இல்லாததால என்னால் முடிஞ்ச அளவுல ஏதாவது புதுசா பண்ணாலமேனுதான் இந்த முயற்சி. வெறும் விளம்பரத்துக்காகப் பண்றார்னு சிலர் நினைக்கலாம். அந்த மாதிரி எந்த‌ நோக்கமும் எனக்கில்லை.

'ஒன் மேன்' கதை கொரோனா காலத்துலயே தொடங்கினது. சில பல காரணங்களால் மனசளவுல அயர்ச்சி உண்டாகிக் கொஞ்சம் தாமதமாகிடுச்சு.

ஆனாலும் நான் நினைச்ச மாதிரி கொண்டு வந்துட்டேன். எல்லா கதாபாத்திரங்கள்லயும் நானே நடிசிருக்கேன். ஆனா அதை மேக் அப் மாதிரியான விஷயங்கள்ல வித்தியாசமாக் கட்டி ரெண்டும் வேற வேற கேரக்டர்னு ஆடியன்ஸ்க்குப் புரிய வச்சிருக்கேன்.

ஆர்ட்டிஸ்டுகள் தாண்டி தொழில்நுட்ப விஷயங்களும் நானே. கதை பத்திச் சொல்லணூம்னா அன்புதான் மையப் பொருள்'' என்றவரிடம், 'நடிப்பு முதலான மற்ற எல்லா விஷயங்களும் ஓ.கே. வெளியீடு என்று வரும் போது எப்படிச் சமாளித்தீர்கள்' என்றோம்.

Sankagiri Rajkumar
Sankagiri Rajkumar

'வெளியீடுனு வரும்போது கேட்கப்படுகிற முதல் கேள்வி ஹீரோ யாரு? காலங்காலமாகக் கேட்கப்பட்டு வருகிற கேள்வி இது. இந்தக் கேள்விக்கான பதில்லதான் படம் வெளியாகுமா இல்லையானே தெரியவரும். ஆனா என்னுடைய அதிர்ஷ்டமோ என்னவோ தயாரிப்பாளர் தாணு சார் படத்தைப் பார்த்தார்.

படம் அவருக்கு ரொம்பவே பிடிச்சுப் போனதும், பிவிஆர் கிட்டப் பேசிப் படம் குறித்துச் சொல்யிருக்கார். அவங்களும் படத்தைப் பார்த்து 'வித்தியாசமா இருக்கே'னு சொன்னதும் என்னுடைய மன பாரம் எல்லாம் இறங்கிடுச்சு. 'இந்தப் படத்தை வெளியிடுவதில் எங்களூக்கும் பெருமை'னு சொன்னாங்க அவங்க. கோவை ஏரியாவில் படம் வெளியாக திருப்பூர் சுப்ரமணியம் உதவியிருக்கார்.

நான் நேசிக்கிற தமிழ் சினிமாவுல என் முயற்சிக்கும் ஆதரவு கொடுக்க நாலு பேர் இருக்கற வரைக்கும் நான் இது மதிரியான வித்தியாசமான முயற்சிகளை சினிமாவில் நிகழ்த்திட்டே இருப்பேன்'' என்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User