பெரியார் அறிவுலகம்: ``இல்லாத பதிப்பகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது எப்படி?"- டிடிவி தினகரன்
பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்த எழுத்தாளர் பெருமாள் முருகன் ``அந்தத் தொகைக் கோடிக்கணக்கில் இருக்கும் என்று தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோகிப்பதற்காகவே புதுப் பதிப்பகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் பெயர்கள் எல்லாம் பொய்ப்பெயர்கள். நூல்களில் காணப்படும் ’பன்னாட்டுத் தரப் புத்தக எண்’ (ISBN) அனைத்தும் பொய்யானவை." எனத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர் ராஜ் மோகன் வரை பலரும் திமுக மீது குற்றம்சாட்டி விமர்சித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``பெரியார் அறிவுலகத்திற்கு போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார் - அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்களை, போலி நூல்கள் ஆக்கிரமித்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு, இல்லாத பதிப்பகங்களின் பெயரில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
அறிவையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டிய நூலகத்தில் நடைபெற்றிருக்கும் முறைகேடை சாதாரணமாக கடந்து செல்லாமல், இல்லாத பதிப்பகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது எப்படி ? அதற்கான ஆணையை பிறப்பித்தது யார்? நூல்களை பரிசோதித்து அங்கீகாரம் வழங்கியது யார் ? என நூல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் தொடங்கி பணப்பரிவர்த்தனை வரை தொடர்புடையவர்கள் ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டும். எனவே, பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகாரை தனி விசாரணைக் குழு அமைத்து உண்மைகளை வெளிக்கொண்டுவருவதோடு, இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு போலி நூல்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அகற்றிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். " எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பா.ஜ.க தலைவர் வானதி சீனிவாசன், ``கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் மிகப் பெரிய ஊழலும், புத்தகங்களில் தமிழர் வரலாறு, செய்யுள்கள் உள்ளிட்டவையும் தவறாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி மிக அதிர்ச்சி அடைய வைக்கிறது.
தமிழின் தொன்மை குறித்தும், தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் நாட்டின் பிரதமர் திரு. மோடி அவர்கள் உலகமெங்கும் பறைசாற்றி வரும் இவ்வேளையில் தவறான கருத்துக்கள், வரலாறு மற்றும் பிழைகளுடன் நூல்களைப் படிக்கும் இளைய சமுதாயமும், போட்டித் தேர்வர்களும், இலக்கிய ஆர்வலர்களும், வாசிப்பாளர்களும் முற்றிலும் குழப்பமடையும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. "A library is a place where history comes alive, where the past speaks to the present, and where the future is shaped." என்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் சிந்தனைக்கே நேர்ந்த மிகப்பெரிய அவமானம் இது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)