'கேரளா அல்லா... இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன?

Aug 17, 2026 - 18:00
0
'கேரளா அல்லா... இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன?

2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கேரள சட்டமன்றத்தில், அந்த மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்று மாற்றப்பட வேண்டும் என்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய அமைச்சரவை இதற்கு அதிகாரப்பூர்வ முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. அதன் பின், இன்று 'கேரளம்' என்கிற பெயருக்கு ஒப்புதல் அளித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

ஆங்கில உச்சரிப்பு!

கேரளா, கேரளம் - வித்தியாசம் என்ன என்கிற கேள்வி எழலாம். கேரளா என்பது ஆங்கில உச்சரிப்புடன் இருக்கிறது என்று அந்த மாநில மக்கள் கருதுகிறார்கள்.

கேரளம் என்பது மலையாள மொழியோடு இயைந்ததாக இருக்கிறது 'கேரளம்' மக்கள் கூறுகிறார்கள்.

இன்னொரு பக்கம், கேரளா என்று சொன்னதும், 'தென்னை மரங்கள் நிறைந்த இடங்கள்'தாம் மனக்கண்ணில் விரிகின்றன.

கேரளம்
கேரளம்

பொருள்...

மலையாளத்தில், 'கேர' என்றால் 'தென்னை மரம்', 'அளம்' என்றால் 'நிலம்'. இதனால், தென்னை மரங்கள் நிறைந்த நிலம் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் ஆங்கில உச்சரிப்பு இருக்கிறது என்று பெயர் மாற்றப்படுவது புதிதல்ல. பாம்பே 'மும்பை' என்றும், மெட்ராஸ் 'சென்னை' என்றும், கொல்கத்தா 'கல்கத்தா', பெங்களூர் 'பெங்களூரு' என்றும் முன்பு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User