ஜெம் வீரமணி வழக்குகள்: 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டது விசாரணையில் கண்டுபிடிப்பு
ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
யார் யார் குற்றவாளிகள்?
சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றத்திற்காக
ஜெம் வீரமணி,
மகேந்திர சிம்ஹன்,
சாந்தி,
லாசர்,
கணேசன்,
சீனிவாசன்,
சக்திவேல்,
பாபு,
பார்த்திபன்,
பெருமாள் (எ) பாலா
ஆகியோர் மீது சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் (SIT) 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேற்படி எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் இதுவரை 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
மேற்படி 9 வழக்குகளில் விபச்சாரத் தடுப்புப் பிரிவு குற்ற எண். 11/2026 வழக்கில் 11.11.2026 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவ்வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டு, குற்றப்பத்திரிகை நகல்கள் 17.11.2026 அன்று எதிரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு வழக்கான விபச்சாரத் தடுப்புப் பிரிவு குற்ற எண். 12/2026-ல் எதிரிகள் மீது 23.11.2026 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Blue Corner Notice
தலைமறைவாகியுள்ள எதிரி பிரகாஷ் என்பவர் மீது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக Blue Corner Notice அறிவிக்கப்பட்டு, அவரைக் கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றத்தில் துரித விசாரணை நடத்தவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)