பொதுத்தேர்தல் vs இடைத்தேர்தல்: அதிமுக கோட்டையை வென்ற தவெக; பலத்தை நிரூபித்ததா திமுக? - ஓர் ஒப்பீடு!
கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்தனர்.
இதனால் இரு தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவியது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெகவின் சத்யபாமா, திமுகவின் சுகன்யா, அதிமுகவின் பானுமதி, நாதகவின் கார்த்திகா மற்றும் சிபிஐ-யின் லட்சுமணன் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
மதுராந்தகம், தாராபுரம் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் இரண்டு தொகுதிகளிலும் தனது வெற்றியை தவெக பதிவு செய்திருக்கிறது.
எடைத்தேர்தல் என்றழைக்கப்பட்ட இந்த இடைத்தேர்தலில் அதிமுக கோட்டையை தவெக கைப்பற்றி இருக்கிறது.
இந்நிலையில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் முடிவுகளின் ஒப்பீட்டை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
வாக்குப்பதிவு
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 93.22 சதவிகித வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் மொத்தம் 89.89 வாக்குகளும் பதிவாகி இருந்தன.

ஆனால் தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 85.88 சதவிகித வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் மொத்தம் 80.31 சதவிகித வாக்குகளும் பதிவாகி இருக்கின்றன. ஆக நடந்து முடிந்த தேர்தலை விட இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது.
மதுராந்தகம்: பொதுத்தேர்தல் vs இடைத்தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 69,284 வாக்குகளைப் பெற்ற அதிமுக முதல் இடத்தையும், 62,090 வாக்குகளைப் பெற்ற தவெக இரண்டாவது இடைத்தையும், 59, 838 வாக்குகளைப் பெற்ற திமுக மூன்றாவது இடத்தையும், 4,950 வாக்குகளைப் பெற்ற நாதக நான்காவது இடத்தையும் பெற்றிருந்தது.
தற்போது முடிந்த மதுராந்தகம் இடைத்தேர்தலில் 70,884 வாக்குகளைப் பெற்று தவெக முதல் இடத்தையும், 51,042 வாக்குகளைப் பெற்று திமுக இரண்டாவது இடைத்தையும், 45,674 வாக்குகளைப் பெற்று அதிமுக மூன்றாவது இடத்தையும், 2,013 வாக்குகளைப் பெற்று நாதக நான்காவது இடைத்தையும் பிடித்திருக்கிறது.
தாராபுரம்: பொதுத்தேர்தல் vs இடைத்தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் 81,100 வாக்குகளைப் பெற்ற அதிமுக முதல் இடத்தையும், 64,373 வாக்குகளைப் பெற்ற திமுக இரண்டாவது இடத்தையும், 46,438 வாக்குகளைப் பெற்ற தவெக மூன்றாவது இடைத்தையும், 6026 வாக்குகளைப் பெற்ற நாதக நான்காவது இடைத்தையும் பெற்றிருந்தது.
தற்போது முடிந்த தாராபுரம் இடைத்தேர்தலில் 66, 841 வாக்குகளைப் பெற்று தவெக முதல் இடத்தையும், 57, 370 வாக்குகளைப் பெற்று திமுக இரண்டாவது இடைத்தையும், 45,280 வாக்குகளைப் பெற்று அதிமுக மூன்றாவது இடத்தையும், 5,268 வாக்குகளைப் பெற்று நாதக நான்காவது இடத்தையும் பிடித்திருக்கிறது.
பொதுத்தேர்தலில் அதிமுக வென்ற இரண்டு தொகுதிகளிலும் தற்போது தவெக வென்று தனது வெற்றி முத்திரையை பதித்திருக்கிறது. அதேசமயம் அதிமுக தனது கோட்டையில் வெற்றியை நழுவவிட்ட நிலையில் திமுக இரண்டாம் இடத்தைப் பிடித்து தனது பலத்தை நிரூபித்துக்காட்டியிருக்கிறது.
இரண்டு தொகுதிகளிலும் திமுகவின் வாக்கு எண்ணிக்கை அளவில் குறைந்திருக்கிறது அதற்கு வாக்கு சதவீதம் குறைந்ததும் ஒரு காரணம் மேலும் பொது தேர்தலில் பெரும் கூட்டணி பலத்தோடு களம் இறங்கிய திமுக இந்த தேர்தலில் தேமுதிக தவிர வேறு பிற கூட்டணி கட்சிகளின் பலம் இன்றியே களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)