Nana Patekar: "நாளை உயிருடன் இருப்பேனா, இல்லையா? என்பது நிச்சயமில்லை" - வைரலாகும் நானா படேகர் வீடியோ

Oct 08, 2026 - 14:30
0
Nana Patekar: "நாளை உயிருடன் இருப்பேனா, இல்லையா? என்பது நிச்சயமில்லை" - வைரலாகும் நானா படேகர் வீடியோ

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் இன்று (அக்.8) உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 75.

கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகர், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மணிபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நானா படேகர்
நானா படேகர்

நானா படேகர், 1951ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தவர். 1978 ஆம் ஆண்டு வெளியான 'கமன்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், இந்தி மற்றும் மராத்திய மொழி திரைப்படங்களில் தனக்கென்ற தனிமுத்திரையைப் பதித்திருக்கிறார்.

அழுத்தமான வசன உச்சரிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தமிழில் 'பொம்மலாட்டம்', 'காலா' போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக 'காலா' படத்தில் முக்கிய வில்லனாக 'ஹரிதாதா' கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார். திரையுலகில் முக்கிய நடிகராகத் திகழ்ந்த நானா படேகரின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நானா படேகரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

நானா படேகர்
நானா படேகர்

அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், "ஒரு நாள் நாம் அனைவரும் விடைபெற வேண்டியவர்கள்தாம். நாளை நான் உயிருடன் இருப்பேனா, இல்லையா? என்பதே நிச்சயமில்லை. ஒவ்வொருவரின் வாழ்விலும் அந்தப் புள்ளி வந்தே தீரும்.

ஆனால், அதற்கு முன்பாக நான் செய்ய நினைத்ததை என்னால் செய்ய முடிந்ததா? என்று எனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User