Ebola: காய்ச்சல் இருக்கிறதா? காங்கோ, உகாண்டா, சூடானில் இருந்து வருபவர்களுக்கு இந்திய அரசு அட்வைஸ்!

May 22, 2026 - 18:01
0
Ebola: காய்ச்சல் இருக்கிறதா? காங்கோ, உகாண்டா, சூடானில் இருந்து வருபவர்களுக்கு இந்திய அரசு அட்வைஸ்!

Ebola வைரஸ் பரவல் தற்போது உலகின் தலைவலியாக மாறியுள்ளது.

காங்கோ, உகாண்டா, தென் சூடான் ஆகிய நாடுகளில் மிக வேகமாக எபோலா வைரஸ் பரவி வருவதால், அந்த நாடுகளில் இருந்து வரும் இந்திய மக்கள் அல்லது பயணிகளுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் (DGHS) கொடுத்துள்ள நெறிமுறையின் படி,

காய்ச்சல்,

சோர்வு,

தலைவலி,

தசை வலி,

வாந்தி,

DGHS அறிவுறுத்தல்
DGHS அறிவுறுத்தல்

வயிற்றுப்போக்கு,

ரத்தப்போக்கு (பல்ஈறு, மூக்கு, சிறுநீர், வாந்தி ஆகியவற்றில் காரணமில்லாமல் ரத்தம் வந்தால்),

தொண்டை புண்

ஆகிய அறிகுறிகள் இருந்தாலோ...

எபோலா இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தாலோ அல்லது நோய் பாதிக்கப்பட்டிருக்கும் நபரின் ரத்தம் அல்லது அவர்களது உடல் திரவங்களோடு கான்டாக்ட் ஏற்பட்டிருந்தாலோ

இமிக்ரேஷனுக்கு முன், விமான நிலைய சுகாதார அதிகாரி அல்லது ஹெல்த் டெஸ்க்கில் கூறியிருக்க வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து வந்த 21 நாள்களுக்குள் மேலே சொன்ன ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User