அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவில்லை' - ஆதவ் அர்ஜுனா

May 22, 2026 - 17:01
0
அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவில்லை' - ஆதவ் அர்ஜுனா

தமிழக முதலமைச்சர் தலைமையிலான த.வெ.க அரசில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக சீ.ரமேஷ் பதவியேற்றிருக்கிறார்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதனை விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் இது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது.

சீ. ரமேஷ்
சீ. ரமேஷ்

அதற்குப் பதிலளித்த அவர், "மக்கள் சாதியின் அடிப்படையில் வாக்களிப்பதில்லை.

சாதி பார்த்து த.வெ.க யாரையும் முன்நிறுத்தவில்லை. சாதி அரசியலை தமிழக மக்கள் தூக்கி எறிந்துள்ளனர்.

ஆனால் அமைச்சர்களின் சாதியை வைத்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "60 நாள்களில் அனைத்தையும் மாற்றி காட்டுவோம். மிகப்பெரிய நிர்வாக மாற்றம் இருக்கும். பல்வேறு துறைகளில் 35% வரை வசூலிக்கப்பட்ட கட்சி நிதி முறையை ஒழித்துள்ளோம்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

தூர் வாராமல் வாரியதாக பில் போட முடியாது. பினாமி பில் முறையை ஒழிப்போம். தவறுகளைக் கண்டறிந்து வருகிறோம். விரைவில் மாற்றுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User