Early Retirement: 40 வயதில் ரிட்டயர்மென்ட்... சாத்தியமா, வெறும் பகல் கனவா?
"மாதம் 80,000 சம்பளம் வருது... ஆனா மாசக் கடைசியில அக்கவுண்ட் காலி! 60 வயசு வரைக்கும் இதே மாதிரி ஓடிக்கிட்டே இருக்கணுமா?"
இது பலரின் மனதை தினமும் குடையும் கேள்வி.
40 அல்லது 50 வயதில் வேலைக்கு 'குட்-பை' சொல்ல முடியுமா? நிச்சயமாகச் சாத்தியம்.
இதை அடைவதற்கான எளிய கணக்கு இதோ:
இந்திய புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
மேலைநாடுகளில் '4% Rule' (ஆண்டுச் செலவை 25-ஆல் பெருக்குவது) பிரபலம். ஆனால் இந்தியாவில்:
பணவீக்கம் (Inflation): பொதுப் பணவீக்கம் 6-7%, மருத்துவப் பணவீக்கம் 10-11%.
பாதுகாப்பான விதி: இந்தியாவில் அதிக பணவீக்கம் இருப்பதால் 3% - 3.5% Withdrawal Rate மட்டுமே பாதுகாப்பானது.
உண்மை: உங்கள் தற்போதைய ஆண்டுச் செலவைப்போல் 30 முதல் 33 மடங்கு தொகையைச் சேர்த்தால் மட்டுமே பயமில்லாமல் ஓய்வு பெற முடியும்.
உங்கள் FIRE Number என்ன?
இன்று உங்கள் மாதாந்திரச் செலவு ரூ. 50,000 (ஆண்டுக்கு ரூ. 6 லட்சம்) எனில்:
15 ஆண்டுகள் கழித்து (6% பணவீக்கத்துடன்): மாதாந்திரச் செலவு = ரூ. 1.20 லட்சம் (ஆண்டுக்கு ரூ. 14.4 லட்சம்).
தேவையான மொத்த நிதி (Target Corpus): 14.4 லட்சம் × 30 = ரூ. 4.32 கோடி. இது பெரியாக தொகையாக தெரியலாம், ஆனால் சேர்ப்பது முற்றிலும் சாத்தியமே!

மியூச்சுவல் ஃபண்ட் ஏன் சிறந்த வழி?
வங்கிகளின் FD தரும் 6-7% வட்டி பணவீக்கத்தை மட்டுமே ஈடுசெய்யும். ஆனால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்டகால நோக்கில் 12% - 15% CAGR வளர்ச்சி தந்து நிதி இலக்கை அடைய உதவும்.
Step-Up SIP: மாதம் ரூ. 30,000 - 40,000 முதலீடு செய்து, ஆண்டுதோறும் முதலீட்டை 10% உயர்த்தினால் (Step-Up), 12-15 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டலாம்.
ஓய்வுக்குப் பின் (SWP): மொத்தப் பணத்தையும் எடுக்காமல், SWP (Systematic Withdrawal Plan) மூலம் மாதம் ரூ. 1.20 லட்சத்தை உங்கள் கணக்கில் வரவு வைக்கலாம். மீதித் தொகை ஃபண்டிலேயே தொடர்ந்து வளரும்.
நீங்கள் செய்ய வேண்டிய 4 விஷயங்கள்
இலக்கை நிர்ணியுங்கள்: பணவீக்கத்தைக் கணக்கிட்டு உங்கள் Target Corpus-ஐக் கண்டறியுங்கள்.
பாதுகாப்பு வலை: 12 மாதச் செலவிற்கான அவசரகால நிதி + ரூ. 20-25 லட்சத்திற்கான ஹெல்த் இன்சூரன்ஸ்.
முதலீடு: Flexi Cap & Index ஃபண்டுகளில் 70%, Debt/Hybrid ஃபண்டுகளில் 30% எனப் பிரியுங்கள்.
பிரித்து முதலீடு செய்தல் (Bucketing Strategy): ஓய்வுக்குப் பின் 3 ஆண்டுகளுக்கான செலவை பாதுகாப்பான Liquid ஃபண்டிலும், மீதியை ஈக்விட்டியிலும் வையுங்கள்.
இயர்லி ரிட்டைர்மென்ட் என்பது வேலையை வெறுத்து ஓடுவதற்கல்ல; 'வேலை செய்தே ஆக வேண்டும்' என்ற கட்டாயத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு!

Early Retirement பெறவிரும்புவோருக்கான சிறப்பு ஒர்க் ஷாப்
60 வயது வரை காத்திருக்காமல், விரைவாக ஓய்வு பெற்று உங்களின் வாழ்வை நீங்கள் விரும்பியபடி வாழ் வேண்டுமா?
இன்னும் 10-15 ஆண்டுகளுக்குள் ரிட்டையர் ஆக விருப்பமா?
மாதம் உங்களுக்கான இரண்டாவது வருமானம்/பென்ஷன் பெற விருப்பமா?
நீங்கள் செய்ய வேண்டியது:
வரும் ஞாயிறு, அக்டோபர் 11, காலை 11 மணிக்கு நடைபெறும் 'Early Retirement' குறித்த ஆன்லைன் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.
40-50 களில் ரிட்டையர் ஆகும் சூட்சுமங்களையும் திட்டங்களையும் அறிந்து செய்லபடுத்தி பயன்பெறுங்கள்.
முன்பதிவுக்கு இங்கே க்ளிக் செய்யவும்: https://labham.money/events/webinar-oct11-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_oct11_2026
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)