தருமபுரி: மகளிர் சுய உதவிக் குழு பெயரில் ரூ 2.88 கோடி மோசடி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!

Oct 09, 2026 - 11:00
0
தருமபுரி: மகளிர் சுய உதவிக் குழு பெயரில் ரூ 2.88 கோடி மோசடி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பெயர்களை முறைகேடாகப் பயன்படுத்தி 2.88 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசடி
மோசடி

தருமபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த சோபியா என்பவர் சமீபத்தில் தொப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், "எங்கள் ஊரிலுள்ள 16 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள 273 பேரும் சேமிப்பு பணத்தை முறையாக செலுத்தி வந்தோம். வங்கிகளில் பெற்ற கடனையும் முறையாக செலுத்தி வந்தோம்.

இந்த நிலையில், 6 மாதத்திற்கு முன்பு 'வாங்கிய கடனுக்கான தொகையை செலுத்தவில்லை, உடனே செலுத்த வேண்டும்' என்று தருமபுரி, பாளையம்புதூர் வங்கிகளிலிருந்து எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்.

முறையாக செலுத்திய எங்களுக்கு நோட்டீஸா என்று அதிர்ச்சியடைந்த நாங்கள், இது குறித்து விசாரித்தபோது,

எங்களிடம் வசூலித்த பணத்தை மகளிர் குழுத் தலைவி வெண்ணிலா, வங்கியில் செலுத்தாமல் இருந்ததும், குழு உறுப்பினர்களின் பெயரைப் பயன்படுத்தி முறைகேடாக ரூ 2.88 கோடி அளவுக்கு கடன் பெற்றதும் தெரிய வந்தது.

ஆனால், கடனை திருப்பி செலுத்தும்படி வங்கி அலுவலர்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

எங்கள் பெயரைப் பயன்படுத்தி ரூ 2.88 கோடி மோசடி செய்துள்ள வெண்ணிலா, அவர் கணவர் முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

வெண்ணிலா - முனுசாமி

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டதைத் தொடர்ந்து வழக்குப் பதிவுசெய்த தொப்பூர் காவல்துறையினர் வெண்ணிலா, முனுசாமி அவர்களின் மகன்கள் என 4 பேரையும் கைதுசெய்தனர். இந்த மோசடியின் பின்னணியில் வங்கி அலுவலர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்து வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User