"அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார்.!"- சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு

Mar 28, 2026 - 13:01
 0
"அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார்.!"- சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு

அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஐபிஎல் 2026 திருவிழா இன்று (மார்ச் 28) தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

தோனி - சிஎஸ்கே
தோனி - சிஎஸ்கே

அதேபோல மார்ச் 30-ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே களம் காண இருக்கிறது.

இம்முறை தோனி ஓர் 'இம்பேக்ட் பிளேயராக' (Impact Player) மட்டுமே ஆடுவார் என்றும், அவருக்கு பதிலாக ஃபினிஷர் ரோலில் இளம் வீரர் கார்த்திக் சர்மா களமிறக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் தோனி டாப் ஆர்டரில் வந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகாலில் தோனி விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.பட்ட

தோனி - சிஎஸ்கே
தோனி - சிஎஸ்கே

"கெண்டைக்கால் வலி காரணமாக தோனி சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்" என்று சிஎஸ்கே நிர்வாகம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0