Deva: தேவாவின் நினைவுகளைச் சுமக்கும் தாய் பெயரிலான பண்ணை தோட்டம்; நல்லடக்க ஏற்பாடுகள் தீவிரம்!

Oct 17, 2026 - 19:00
0
Deva: தேவாவின் நினைவுகளைச் சுமக்கும் தாய் பெயரிலான பண்ணை தோட்டம்; நல்லடக்க ஏற்பாடுகள் தீவிரம்!

`மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் இறுதி அஞ்சலியில் அரசு மரியாதை வழங்கப்படும்’ என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, தேவாவின் சொந்த கிராமமான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள மாங்காடு சக்கரமல்லூரில் நாளை நடைபெறும் இறுதி அஞ்சலிக்கான ஏற்பாட்டினை உறவினர்கள், ஊர்க்காரர்களுடன் இணைந்து வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் செய்து வருகிறார்கள்.

பண்ணை வீடு தோட்டம்

சக்கரமல்லூரில் தேவாவின் தாயார் கிருஷ்ணவேணி பெயரில் பண்ணை வீடு தோட்டம் அமைந்திருக்கிறது. இந்த தோட்டத்தில்தான் அவரின் உடல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பண்ணை வீட்டுக்கு வந்துச் செல்வதை தேவா வழக்கமாக வைத்திருந்தார்.

அப்படி வரும்போது, உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து உரையாடுவது, அவர்களுக்குப் புத்தாடைகளை வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பது என அவரின் நினைவுகளைச் சுமந்து நிற்கிறது பண்ணை வீடு.

பண்ணை வீட்டின் முதல் தளத்தில் தேவா இளைப்பாறுவதற்கான அறை இருக்கிறது. இங்கு வரும்போது, இந்த அறைக்குள்தான் அவர் நீண்டநேரத்தை செலவிடுவாராம். அதேபோல, அங்குள்ள குலதெய்வமான மகாபலி அம்மன் ஆலயத்திலும் பங்காளிகளை அழைத்து வழிபடுவாராம். தனது சொந்த செலவில் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தையும் கட்டிக் கொடுத்து இசை நிகழ்ச்சியையும் நடத்தியிருக்கிறாராம்.

தேவாவின் அறை

கடந்த வாரம்கூட சக்கரமல்லூர் கிராமத்தில் வசிக்கும் உறவுக்கார இளைஞன் சுதாதகர் என்பவருக்கு வாட்ஸ் அப் மூலமாக பிறந்த நாள் வாழ்த்து வீடியோவையும் அனுப்பியுள்ளார் தேவா. உறவினர்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்வாராம். தேவா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆல்பங்களை பார்த்து மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் சக்கரமல்லூர் கிராம மக்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User