Delivery Boy: "என் மகன் என்பதாலேயே நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை" - லியோனி கூறியதென்ன?

Nov 27, 2026 - 15:32
0
Delivery Boy: "என் மகன் என்பதாலேயே நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை" - லியோனி கூறியதென்ன?

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டெலிவரி பாய்’.

இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் ஆக்ஷன் டிராமாவாக இன்று வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லியோனி, " ‘டெலிவரி பாய்’ படம் ஒரு கூட்டு முயற்சியில் உருவானப் படம். என் மகனுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமையும். காரணம் பலருடைய உழைப்பு இணைந்திருக்கிறது.

டெலிவரி பாய்
டெலிவரி பாய்

லியோனி மகனா நீ? உனக்கு எதற்கு சினிமா எல்லாம் என்று கேட்பார்கள். இதனால் அவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் எல்லாம் லியோனி மகன் என்பதாலேயே கிடைக்காமல் போயிருக்கிறது. லியோனி மகன் என்று பாராமல் சிவக்குமார் என்றவரின் திறமையைப் பாருங்கள்.

என் மகனுக்கு இனி நல்ல கதைகள் அமைந்து சினிமா துறையில் ஜெயிக்க வேண்டும். சினிமா அதனை நம்பியவர்களை கைவிட்டதாக சரித்திரமே இல்லை. சினிமாவிற்காக உழைப்பவர்கள் நிச்சயம் வென்றுவிடுவார்கள். என் மகன் நிச்சயம் இந்தத் துறையில் வென்றுவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User