`தூக்கு தண்டனையா... ஆயுள் தண்டனையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்

Mar 30, 2026 - 17:01
 0
`தூக்கு தண்டனையா... ஆயுள் தண்டனையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு, நீதிபதி முத்துகுமரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 23 ஆம் தேதி 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தெரிவித்ததோடு, அவர்களின் மனநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, தீர்ப்பு விவரங்கள் மார்ச் 30-ம் தேதி வெளியாகும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி, "மத்திய, மாநில அரசின் அறிக்கை என்ன ஆனது. சாத்தன்குளம் வழக்கு மிக முக்கியமானது. எந்தக் கருத்தாக இருந்தாலும் பதில் மனுவாகப் பதிவுசெய்யுங்கள். சாத்தன்குளம் வழக்கு மிக முக்கியமானது" என்றார்.

சாத்தன்குளம் வழக்கு

அதற்கு, '2 நாள்கள் அவகாசம் கொடுங்கள்' - சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதைக் கேட்ட நீதிபதி காட்டமான தொனியில், ``கடந்த 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யக் கூறியும், ஏன் அறிக்கை தாக்கல் செய்யபடவில்லை. 9 பேருக்கு தூக்குத் தண்டனையா ஆயுள் தண்டனையா என நான் முடிவெடுக்க வேண்டும்... அதற்காகவே அறிக்கை கேட்கிறேன்.

என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அறிக்கை கேட்கிறேன்" எனச் சொன்னதோடு, வழக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி ஒத்திவைத்தார்.

இதைத் தொடர்ந்து சாத்தன்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒன்பது குற்றவாளிகளும் நீதிபதி முன் ஆஜரானார்கள். மாலை 4.30 மணிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0