ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? ``யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் ராஜ்மோகன்

Nov 10, 2026 - 15:00
0
ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? ``யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் ராஜ்மோகன்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டோர் தெரிவித்திருந்தார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இந்த நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் சென்னை புரைசைவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் குறித்துத் தவறான செய்திகள் பரவி வருவது தொடர்பாகப் புகார்கள் அளிக்கப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது முழுமையாக விசாரணை நடத்தப்படும். தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், கட்சிக்காரராகவோ அல்லது மாண்புமிகு நபராகவோ இருந்தாலும் எந்தவித பாராபட்சமும் இன்றிச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய குற்றச்சாட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த தண்டனை உறுதி செய்யப்படும்.

தொடர்ந்து சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் விமர்சனத்துக்குள்ளாகிறது. காவல்துறை முன்பை விட தற்போது தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ரோந்துப் பணிகள் (Patrolling) அதிகரிக்கப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் அடையாளம் காணப்பட்டு உடனடியாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கு முழு பாதுகாப்பு உணர்வை வழங்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகளைச் சட்ட ஒழுங்குத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

36 words / 352 characters

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User