காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் - சொந்த ஊரில் இறுதிச்சடங்கு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) இன்று காலை 9 மணிக்கு காலமானார்.
காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார்.
அவரின் மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக கடந்த 19 நாட்களுக்கு முன் சென்னை கே.எம்.சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மாலதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இருப்பினும் நோய் தொற்று காரணமாக கடந்த 17 நாள்களாக மூச்சு விட சிரமப்பட்டு வரும் தனது மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க உதவிடக் கோரி முத்துக்காளை தமிழக முதல்வர் விஜய்யிடம் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் விஜய் உடனடியாக மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ் மோகனை நேரடியாக அனுப்பி, நலம் விசாரித்து, உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
அவரது உடல் இறுதி சடங்கிற்காக விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி என்ற திருக்கோதையாபுரம் எடுத்துச் செல்லப்படுகிறது. மனைவியின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றுக் கொண்டுள்ளார் முத்துக்காளை. இறுதிச்சடங்கு இன்று இரவு அவரின் சொந்த ஊரில் நடைபெறுகிறது.
இந்த தம்பதிக்கு வாசன் எனும் மகன் இருக்கிறார். அவர் தற்போது கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)