தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோவை பெண் காவலர்; ஆசிய போட்டிக்கு தகுதி பெற்று அசத்தல்!

Jun 27, 2026 - 12:32
0
தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோவை பெண் காவலர்; ஆசிய போட்டிக்கு தகுதி பெற்று அசத்தல்!

கோவை மாநகர காவல் துறையில் ஆயுதப்படை காவலராக கெளதமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான 64வது தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில்,  தமிழ்நாடு தடகள அணி சார்பில் பங்கேற்றார். 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடம் 04.17 விநாடிகளில் கெளதமி இலக்கை எட்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

கெளதமி
கெளதமி

இதன் மூலம், வருகிற செப்டம்பர் மாதம் ஜப்பான் நகோயா நகரில் நடைபெற உள்ள 20 வது ஆசிய போட்டியில் இந்திய தடகள அணியின் சார்பில் பங்கேற்கும் தகுதியை கெளதமி பெற்றார். அவருக்கு கோவை மாநகர காவல் துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிய போட்டியில் பங்கேற்க கெளதமி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User