"உங்களைப் பொறுத்தவரையில் எது நல்ல படம்?'' - கெளதம் மேனனின் கேள்விக்கு பாரதிராஜா அளித்த பதில்!

Jun 10, 2026 - 17:02
0
"உங்களைப் பொறுத்தவரையில் எது நல்ல படம்?'' - கெளதம் மேனனின் கேள்விக்கு பாரதிராஜா அளித்த பதில்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு.

நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்குக் கிளம்பி வந்திருக்கிறார். ஆனால், இங்கு நடந்த விஷயங்கள் அவரை வேறு திசைக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றன.

பாரதிராஜா

கடந்த 2023-ம் ஆண்டு, ஆனந்த விகடனுக்காக இயக்குநர் பாரதிராஜாவை, இயக்குநர் கெளதம் மேனன் பேட்டிக் கண்டார்.

அந்தப் பேட்டியில், பாரதிராஜாவை பொறுத்த வரையில் நல்ல படம் எது, அவருடைய கனவு படம் எது என்பது குறித்து பேசியிருக்கிறார்.

இந்தப் பேட்டியில் ‘நல்ல படம்னா உங்களைப் பொறுத்தவரை எது?' என்று கெளதம் மேனன் கேட்டார்.

அதற்கு, "நான் ஓர் இயக்குநரா, கதாசிரியராதான் படம் பார்ப்பேன். படம் போகிற போக்கில் நான் இயக்குநர், கதாசிரியர் அப்படிங்கிறதையெல்லாம் மறந்துட்டு வாயைப் பிளந்து படம் பார்க்க வைத்தால், அது நல்ல படம்’’ என எளிய விளக்கம் தந்தார், இயக்குநர் இமயம்.

பாரதிராஜா - கெளதம் மேனன்

‘‘உங்களுக்குக் கனவுப் படம்னு ஏதாவது இருக்கா அல்லது அதை எடுத்துட்டீங்களா?’’ என்கிற கேள்விக்கு பாரதிராஜா, ‘‘கனவுப் படம் இதுதான்னு சொன்னா வாழ்க்கை முடிஞ்சிடும் சார். என் கனவுகளுக்கு எல்லையே இல்லை.

போய்க்கிட்டே இருக்கணும். இதோ இன்னைக்கு உங்களோடு நடிக்கிறேன். நாளைக்கு அடுத்த தலைமுறையோட! மனுஷன் இருக்கிற வரைக்கும் பிடிச்சதைச் செஞ்சு, பயணிச்சுக்கிட்டே இருக்கணும், நான் அப்படித்தான்!’’ எனக் கூறியிருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User