Bharathiraaja: 'சட்டையை பிடித்து வெளியே தள்ளினார்கள்!' - சபதம் எடுத்து வென்ற பாரதிராஜா!
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார்.
சினிமாவின் அத்தனை முன்னேற்றங்களிலும் பாரதிராஜாவின் தடம் இருந்திருக்கிறது. ஃபிலிம் ரோல் தொடங்கி, ஓடிடி வரையும் பாரதிராஜா பயணித்து, 40-க்கும் மேற்பட்ட படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்.
ஏ.வி.எம் நிறுவனத்தில் பாரதிராஜாவுக்கு நடந்த சம்பவமும், அங்கு பாரதிராஜா எடுத்த சபதம் பற்றியும் உங்களுக்கு தெரியுமா?
1964-ம் ஆண்டு வெளியான 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் காட்சியைப் பார்க்க ஏ.வி.எம் அலுவலகம் சென்றிருக்கிறார் பாரதிராஜா. அவருடன் இருந்த ஒருவர்தான் படம் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறார்.
படம் தொடங்கியவுடன், அங்கிருப்பவர்கள் பாரதிராஜாவை யாரெனக் கேட்டு வெளியே அனுப்பியிருக்கிறார்கள். அப்போது பாரதிராஜாவை அழைத்துச் சென்றவரே பயத்தில், 'அவர் யாரென்றே எனக்குத் தெரியாது' எனப் பொய் சொல்லிவிட்டராம். அதன் பிறகு பாரதிராஜாவின் சட்டையைப் பிடித்து ஏ.வி.எம் வாசலில் இருந்து வெளியே தள்ளிவிட்டிருக்கிறார்கள்.

அப்போது கலங்கிய கண்களோடு, 'ஒரு நாள் இந்த கம்பெனியே என்னைக் கூப்பிடும் அளவிற்கு எனக்குள் ஆற்றலை வளர்த்துக் கொள்வேன்' எனச் சபதம் போட்டிருக்கிறார் பாரதிராஜா.
அதன் பிறகு முறையாகவே நான் ஏ.வி.எம்-முக்குள் வந்தேன் என ஒரு நிகழ்வில் பாரதிராஜா பெருமையாகக் கூறியிருப்பார். பாரதிராஜா இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளிவந்த 'புதுமைப் பெண்' படத்தை ஏ.வி.எம் நிறுவனம்தான் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)