டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதே.." - சச்சின் டெண்டுல்கர்

Jul 23, 2026 - 23:01
0
டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதே.." - சச்சின் டெண்டுல்கர்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.

இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.

இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் எனக் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறது.

cjp protest
cjp protest

பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியான நிலையில், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் பா.ஜ.க அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``என் தந்தை ஒரு பேராசிரியர். அவர் பல இளம் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் இருந்தார். அவர் தொடக்கத்திலேயே எனக்குக் கற்றுக்கொடுத்த ஒரு பாடம் `தோல்வியடைவது பரவாயில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதே.'

சமூகத்தில் உள்ள பெரியவர்கள் என்ற முறையில், ஒரு கலாச்சாரத்தை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. உழைப்பை விட முடிவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் ஒரு சமூகம், தகுதிக்கு முக்கியத்துவம் தராமல் குறுக்கு வழிகளையே நாடும்.

இன்று, மாணவர்கள் தங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என்று ஏமாற்றமடையும் போது, அதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் இனி ஒருபோதும் இதுபோன்று உணராதிருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

இளைய இந்தியா கனவுகளாலும் ஆற்றலாலும் நிரம்பியுள்ளது. அவர்களே நமது வெற்றிக்கு எரிபொருள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் உட்பட சமூகமாக உள்ள நாம் அனைவரும், நமது இளைஞர்கள் தொடர்ந்து ஊக்கத்துடனும் ஆற்றலுடனும் இருப்பதை உறுதி செய்வதில் மிகப்பெரிய பொறுப்பையும் வெவ்வேறு பங்கையும் கொண்டுள்ளோம்.

கடின உழைப்பிற்குப் பலன் கிடைக்கும், நேர்மை ஊக்குவிக்கப்படும், மற்றும் தகுதி வெற்றி பெறும் ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.

நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் தீர்வுகளை நாம் அனைவரும் நிச்சயமாகக் கண்டறிவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஜெய் ஹிந்த்! " எனப் பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User