அறிய வானியல் நிகழ்வு; இன்று சூரிய கிரகணம்... இந்தியாவில் காண முடியுமா?

Aug 12, 2026 - 23:30
0
அறிய வானியல் நிகழ்வு; இன்று சூரிய கிரகணம்... இந்தியாவில் காண முடியுமா?

2026 ஆகஸ்ட் 12-ம் தேதியான இன்று அரிய முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் இந்த முழு கிரகணத்தைக் காண முடியும்.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும் பகுதிகளில் முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். அதே நேரத்தில், வடக்கு அரைக்கோளத்தின் பல பகுதிகளில் பகுதி சூரிய கிரகணமும் தென்படும்.

அமெரிக்காவின் அலாஸ்கா முதல் வடக்கு கரோலினா வரையிலான சில பகுதிகள், கனடாவின் பெரும்பாலான பகுதிகள், ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் பகுதி கிரகணத்தைப் பார்க்க முடியும்.

இந்த கிரகணத்தின் மற்றொரு சிறப்பு, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளில் சூரியன் மறையும் நேரத்திலும் கிரகணம் நீடிக்கும் என்பதாகும். இதனால் கிரகணத்துடன் கூடிய சூரிய அஸ்தமனத்தை காணும் அரிய வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வானியல் நிகழ்வை நாசா ஆகஸ்ட் 12 அன்று அமெரிக்க கிழக்கு நேரப்படி மதியம் 1.15 மணி முதல் நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்கள் இந்த அரிய நிகழ்வை எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் இந்த கிரகணத்தைக் நேரடியாகக் காண இயலாது என்பதால், நாசா (NASA) மற்றும் ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் யூடியூப் பக்கங்கள் வழியே நேரலையில் (Live Stream) காணலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User