வாக்குவாதம் விபரீதமானது: கொல்கத்தாவில் தாயாருடன் சேர்ந்து லிவ்இன் பார்ட்னரை வெட்டி கொன்ற பெண்

Nov 09, 2026 - 16:30
0
வாக்குவாதம் விபரீதமானது: கொல்கத்தாவில் தாயாருடன் சேர்ந்து லிவ்இன் பார்ட்னரை வெட்டி கொன்ற பெண்

கொல்கத்தாவின் காரியா பகுதியில் உள்ள பர்தாபாத் என்ற இடத்தில் தனது லிவ் இன் பார்ட்னர் சஞ்சலிகா பாசு என்பவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சர்தக் சர்கார். சஞ்சலிகா பாசுவின் தாயார் மெளமிதாவும் அவர்களுடன் தங்கி இருந்தார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியரான சர்கார் கொல்கத்தாவின் தகவல் தொழில்நுட்ப மையமான சால்ட் லேக் பிரிவு V இல் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தம்பதியினர் இருவரும் காளி பூஜைக்காக பட்டாசுகளை வாங்கிவிட்டு, உள்ளூர் கடையில் இறைச்சியை வாங்கிக் கொண்டு மாலை வீடு திரும்பினர்.

பின்னர் இரவில், சர்கார் மற்றும் சஞ்சலிகா இடையே தனிப்பட்ட விஷயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சஞ்சலிகா சர்காரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இத்தாக்குதலில் சர்கார் தோளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

உடனே சஞ்சலிகா அதிகாலை 1.30 மணிக்கு அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியில் வந்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து சர்காரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் அதற்குள் இறந்துவிட்டார். இந்த சம்பவத்திற்கு சற்று முன்னர் அவர்கள் வசித்த வீட்டில் இருந்து கடும் வாக்குவாதம் மற்றும் பலத்த சத்தம் கேட்டதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு சஞ்சலிகாவை கைது செய்தனர்.

இது குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் சயான் பால் என்பவர் கூறுகையில், "ஒரு பெண் அழுது உதவி கேட்கும் போது நாங்கள் இன்னும் விழித்திருந்தோம். நாங்கள் உடனடியாக அவர்களது பிளாட்டுக்கு விரைந்தோம். படுக்கையில் ஒரு இளைஞன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டோம். எங்கள் உதவியை நாடிய பெண்ணின் கழுத்தில் பல கீறல்கள் இருந்தன. நாங்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தோம்," என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக சஞ்சலிகாவின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ள மௌமிதாவிற்கு இச்சம்பவத்தில் உள்ள பங்கு குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடந்தபோது அவர் அங்கு இருந்தாரா என்பதையும், இந்தச் சம்பவத்தில் அவருக்கு ஏதேனும் நேரடி தொடர்பு இருந்ததா என்பதையும் கண்டறிய போலீஸார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User