ரயில் டிக்கெட் கேன்சல் செய்யப் போறீங்களா? - இனி 'இவ்வளவு' காசு பிடிக்கப் போறாங்க!

Mar 25, 2026 - 08:32
 0
ரயில் டிக்கெட் கேன்சல் செய்யப் போறீங்களா? - இனி 'இவ்வளவு' காசு பிடிக்கப் போறாங்க!

டிக்கெட்டை கேன்சல் செய்தால் எவ்வளவு ரூபாய் ரீஃபண்ட் செய்யப்படும் என்பதில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே துறை.

அவை என்னென்ன?

ரயில் கிளம்புவதற்கு...

72 மணிநேரத்திற்கு முன்பு, எப்போது கேன்சல் செய்தாலும், மிக சிறிய தொகையே கழிக்கப்படும். அதிகபட்ச தொகை ரீஃபண்ட் செய்யப்பட்டுவிடும்.

ரயில்
ரயில்

72 - 24 மணிநேரத்திற்குள் கேன்சல் செய்யப்பட்டால், 25 சதவிகித தொகை அபராதமாக பிடிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை ரீஃபண்ட் செய்யப்படும்.

24 - 8 மணிநேரத்திற்குள் என்றால், டிக்கெட் தொகையில் 50 சதவிகிதம் மட்டுமே ரீஃபண்ட் செய்யப்படும்.

8 மணிநேரத்திற்கும் குறைவாகச் சென்றால், ரீஃபண்ட் கிடையாது.

அடுத்து..?

ரயில் கிளம்புவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை, எந்த ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறலாம் என்கிற ஆப்ஷனை மாற்றலாம்.

இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 15 என இரண்டு கால இடைவெளிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0