ஸ்பிரிங் தொழில்நுட்பத்துடன் தற்கொலை தடுப்பு மின்விசிறிகள்- சூரத் பல்கலைக்கழகத்தில் புது ஏற்பாடு

Oct 24, 2026 - 08:30
0
ஸ்பிரிங் தொழில்நுட்பத்துடன் தற்கொலை தடுப்பு மின்விசிறிகள்- சூரத் பல்கலைக்கழகத்தில் புது ஏற்பாடு

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் சில நேரங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு பெரும்பாலும் மின்விசிறியைத்தான் பயன்படுத்துகின்றனர். இதையடுத்து இப்பிரச்னைக்கு தீர்வு காண குஜராத்தின் சூரத்தில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் தற்கொலை முயற்சிகளைத் தடுக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் ஒன்பது விடுதிகளில் 388 தற்கொலை எதிர்ப்பு மின்விசிறிகளை நிறுவியுள்ளது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மின்விசிறிகள் 10 கிலோவிற்கும் அதிகமான எடையைப் பயன்படுத்தும்போது கீழ்நோக்கிச் சாய்ந்து, மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் ஸ்பிரிங் தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் உள்ள ஐந்து பெண்கள் விடுதிகள் மற்றும் நான்கு ஆண்கள் விடுதிகளில் இவை பொருத்தப்பட்டுள்ளது. மாணவிகள் விடுதிகளில் 170 தற்கொலை மின்விசிறிகளும், மாணவர்கள் விடுதிகளில் 218 மின்விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட மின் விசிறிகளை பயன்படுத்தும் அபாயத்தைக் குறைக்கும் வகையில் இந்த மின்விசிறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரண நிலைகளில் அவை வழக்கமான மின்விசிறி போலவே செயல்படும். இருப்பினும், குறிப்பிட்ட எடைக்கு மேல் அதிகரிக்கும்போது , ​​ஸ்பிரிங் மெக்கானிசம் செயல்பட்டு விசிறி அதன் வழக்கமான நிலையில் இருந்து கீழே இறங்கும். இந்த மின்விசிறியானது மாணவர்களை தற்கொலை முயற்சியில் இருந்து தடுக்கவும் மற்றும் உயிர்களைக் காப்பாற்றவும் உதவும். இருப்பினும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தடுக்க உத்தரவாதம் அளிக்க முடியாது தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மின் விசிறியும் ரூ.2500 ஆகும்.

இந்த முடிவு குறித்து பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் கிஷோர்சிங் சாவ்தா கூறுகையில்,''பல்கலைக்கழக வளாகத்தில் இதுவரை இத்தகைய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தச் சிறப்பு மின்விசிறிகளைப் பொருத்தியுள்ளோம். வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் முழுவதும் சுமார் 388 'தற்கொலை தடுப்பு' மின்விசிறிகளைப் பொருத்தி வருகிறோம். இவற்றின் முக்கிய அம்சம் என்னவென்றால், மின்விசிறியில் ஏதேனும் எடை கொடுக்கப்பட்டால், அதன் ஸ்பிரிங் அமைப்பு செயல்பட்டு, மின்விசிறி கீழ்நோக்கி இறங்கிவிடும்.

அதே நேரத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிடும். இது ஒரு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்ற உதவும். பிற பல்கலைக்கழகங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு, எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆறு முறை அல்லது 12 முறைக்கு மேல், எங்கள் பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்த தயாராக இருக்கிறது. ஆனால் மாணவர்கள் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தால் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கக்கூடாது. தற்கொலை எண்ணங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User