Anirudh: "இது முக்கியமான ஒரு மைல்கல்!" - அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து வேடன்

Jul 19, 2026 - 18:31
0
Anirudh: "இது முக்கியமான ஒரு மைல்கல்!" - அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து வேடன்

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் 'டிசி' படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

முதலில் இப்படம் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் வாமிகா கேபி, சஞ்சனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Lokesh Kanagaraj - DC
Lokesh Kanagaraj - DC

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன.

இதில் 'பூம் பா டிக டிக' பாடல் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இப்பாடலை ராப் பாடகர் வேடன் எழுதிப் பாடியிருக்கிறார். அனிருத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து வேடன் பகிர்ந்திருக்கிறார்.

அவர், "என் இசைப் பயணத்தின் மிக முக்கியமான ஒரு மைல்கல்லை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதல் முறையாக, வரவிருக்கும் 'DC' திரைப்படத்திற்காக ‘ராக்ஸ்டார்’ அனிருத் ரவிச்சந்தருடன் இணைந்து ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இதற்கான பாடல் பதிவு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமைந்தது. தங்களின் இசையமைப்பால் லட்சக்கணக்கானவர்களைத் தூண்டி, தற்கால இந்தியச் சினிமாவின் இசையை மறுவரையறை செய்த அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த பெருமையாகவும், என் நீண்ட நாள் கனவு நனவானதாகவும் உணர்கிறேன்.

ராப் பாடகர் வேடன்
ராப் பாடகர் வேடன்

ஒவ்வொரு புதிய கூட்டணியும் நமக்கு ஏதாவது ஒரு புதிய பாடத்தைக் கற்றுக்கொடுக்கும். அந்த வகையில் இந்த அனுபவம் எனக்கு மிகவும் முக்கியமானது.

அனிருத் ஸ்டுடியோவிற்குள் கொண்டு வரும் அந்த எனர்ஜி, ஆர்வம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை உண்மையிலேயே வியக்க வைக்கின்றன.

இந்தத் தனித்துவமான பாடலைப் பதிவு செய்த அனுபவத்தை என் வாழ்நாளில் நான் எப்போதும் போற்றி மகிழ்வேன். என் மீது நம்பிக்கை வைத்து, இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய 'DC' திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User