அதிமுக: ``எப்போதும்போல போங்க போங்கனு சொல்லாம...' - எஸ்.பி.வேலுமணி!| News Today live update

May 15, 2026 - 10:02
0
அதிமுக: ``எப்போதும்போல போங்க போங்கனு சொல்லாம...' - எஸ்.பி.வேலுமணி!| News Today live update

வாங்க...வாங்க... என அழைத்துப்பாருங்கள் - எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமி -  எஸ்.பி.வேலுமணி
எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்காக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக எஸ்.பி.வேலுமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்- “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எடப்பாடி அறிவிப்பு செல்லாது...

நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதன்

தவெக-வுக்கு ஆதரவுபோக்கை கடைபிடிக்கும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அந்த அறிவிப்பு செல்லாது எனவும், பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் அந்தந்தப் பொறுப்புகளிலேயே தொடர்ந்து நீடிப்பார்கள் எனவும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமைக்கழகச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்வு!

AG&Pratham CNG Station

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் டெல்லியில் ஒரு கிலோ CNG ரூ. 79.09-ஆகவும், மும்பையில் ரூ. 84-ஆகவும் அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பெரும்பாலும் CNG-ல் இயங்குவதால், இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் பயணச் செலவை நேரடியாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

மேற்கு ஆசியப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User