'11-ம் தேதி காலை 9.30 மணி' - திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்?!

Jun 07, 2026 - 14:31
0
'11-ம் தேதி காலை 9.30 மணி' - திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்?!

திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் தவெக சார்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் தகவல்கள் பேசப்பட்டது.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் தன்னுடைய வாழ்க்கை குறித்த முக்கியமான முடிவு குறித்து 11-ம் தேதி அறிவிப்பதாக பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "நான் திருச்சி கிழக்குத் தொகுதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகப் பல்வேறு ஊடகத் தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

என்னுடைய ஊடக நண்பர்கள் பலரும் இது குறித்து விளக்கம் கேட்பதற்காக என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்திக்கக் கோரியும் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

இந்த தகவல்களுக்கு நான் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையை எட்டியுள்ளதால், இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் தற்போது 'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன்.

என்னுடைய இந்த ஷெட்யூல் வரும் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. என் தாயாரின் ஆசிர்வாதத்துடன், என்னுடைய வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான முடிவு வரும் 11-ம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User