மதுரை: தனிஷ்க் நகை கடையில் கிலோ கணக்கில் நகைகள் கொள்ளை! - கடை திறந்து 15 நாட்களில் கைவரிசை

Nov 12, 2026 - 14:30
0
மதுரை: தனிஷ்க் நகை கடையில் கிலோ கணக்கில் நகைகள் கொள்ளை! - கடை திறந்து 15 நாட்களில் கைவரிசை

மதுரை பைபாஸ் சாலையில் தனிஷ்க் ஜூவல்லரி  ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த கடையானது சுமார் 15 நாட்களுக்கு முன்பு தான் இந்த பகுதியில் திறக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல கடையானது செயல்பட்ட நிலையில் இரவு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது கடையின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்த நகை பொருள்கள் திருடுபோய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை நகைகடையில் கொள்ளை

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் பின்பக்கம் வாயிலாக கடைக்குள்  புகுந்து கடையில் இருந்த 50 கோடி மதிப்பில்  நகை பொருட்களன திருடி சென்றுள்ளதாக  தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்,  துணை கமிஷனர் இனிகோ திவ்யன், வனிதா உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்

 இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் வாயிலாகவும் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

 இந்த கடையானது கடந்த 15 தினங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டதாகவும் கடையில் ஏராளமான பொருள்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

மதுரை நகைகடையில் கொள்ளை

இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில்,"கடையில் 3 நபர்கள் சுவர் மற்றும் கதவை உடைத்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். கடையில் இருந்த பொருட்களில் 30 சதவீத பொருட்கள் திருடு போய் உள்ளது. திருடு போன நகைகளின் மதிப்பு எவ்வளவு என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User