பயணிகளை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமிகள்; திருச்சி ரயில் நிலையத்தில் அதிர்ச்சி... கைது செய்த போலீஸ்!

Oct 19, 2026 - 11:31
0
பயணிகளை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமிகள்; திருச்சி ரயில் நிலையத்தில் அதிர்ச்சி... கைது செய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய தம்பி என்பவரின் மகன் கோவிந்தராசு (வயது: 46). இவர், தனது நண்பர் மகாதேவனோடு திருப்பூரில் இருந்து மங்களூர் விரைவு வண்டியில் பொதுப்பெட்டியில் பயணம் செய்து திருச்சி கோட்டை ரயில் நிலையம் வந்தார். அப்போது, நடைமேடையில் மதுபோதையில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க 3 பேர் கோவிந்தராசு மற்றும் மகாதேவனை தகாத வார்த்தைகளை திட்டி அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டதாக சொல்லப்பசுகிறது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக திருச்சி இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களோடு இணைந்து தேடி வந்த நிலையில் திருச்சி, வாமடம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் தங்க குமார் (வயது: 27) என்பவரை கைது செய்து 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

crime

அதோடு, இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளில் ஒருவரான மாரியப்பன் என்னும் எலி மாரியப்பன் (வயது: 23) என்பவரையும் கைது செய்தனர். இந்நிலையில், ரயில்வே நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை என்று பொதுமக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். ரயில்வே நிலையத்தில் இரு பயணிகளை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User