`இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கினார்கள்'; காலையில் சடலமாக மீட்கப்பட்ட 3 குழந்தைகள், பெற்றோர்!

Oct 17, 2026 - 19:00
0
`இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கினார்கள்'; காலையில் சடலமாக மீட்கப்பட்ட 3 குழந்தைகள், பெற்றோர்!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ரபுபுரா பகுதியில் வசித்து வந்தவர் மகேஷ். இவரது மனைவி லலிதா(35). இவர்களுக்கு 11 வயது முதல் 7 வயதுக்குள் மூன்று குழந்தைகள். இவர்கள் இரவில் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர். காலையில் 5 பேரும் உறக்கத்தில் இருந்து எழும்பவே இல்லை. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து 5 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோதனை செய்தபோது அவர்கள் 5 பேரும் இறந்திருந்தனர். இதையடுத்து இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் பலியானவர்களில் ஒருவரான மகேஷின் தாயார் கூறுகையில், நேற்று இரவு குடும்பத்தினர் நூடுல்ஸ் சாப்பிட்டனர் என்று தெரிவித்தார். மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பிற அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறை குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்கொலை செய்யும் நோக்கில் விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவில் தர்பூசணி சாப்பிட்டுவிட்டு படுத்தவர்கள் காலையில் இறந்து போனார்கள். போலீஸார் நடத்திய தீவிர விசாரணை மற்றும் மருத்துவ ஆய்வுகளுக்கு பிறகு அவர்கள் தற்கொலை செய்திருந்தது தெரிய வந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User