ஆந்திரா: பள்ளிக்குள் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்: துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த போலீஸ்!

Nov 02, 2026 - 10:31
0
ஆந்திரா: பள்ளிக்குள் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்: துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த போலீஸ்!

நேற்று முன்தினம் (அக்டோபர் 31) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது வகுப்பறைக்குள் புகுந்த 21 வயதான நபர் ஒருவர் இரு மாணவிகளைச் சங்கிலி ரம்பத்தால் தாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டார்.

அவரை ஆந்திரா போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

ஹேமந்த்
ஹேமந்த்

சுட்டுப்பிடிப்பு

இதுவரை வெளியாகி உள்ள தகவலின்படி, நேற்று (நவம்பர் 1) ஹேமந்த் (என்கிற ‘டும்மு’) என்ற அந்தச் சந்தேக நபர் காட்டுப் பகுதி ஒன்றில் தலைமறைவாக இருப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

ஹேமந்த்தைக் கைது செய்யப் போலீசார் சென்றபோது, கையில் கத்தியுடன் தப்பித்துச் செல்ல முயன்றிருக்கிறான். போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளான். இதில் பல போலீசார் காயமடைந்துள்ளனர்.

இதனால், போலீசார் அவனை நோக்கி 6 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்திருக்கின்றனர்.

ஆசிரியர் என்ன சொல்கிறார்?

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஆசிரியர், “குற்றவாளி சங்கிலி ரம்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழையும்போது, அது என்னவென்று சரியாகத் தெரியவில்லை.

பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததால், அது சம்பந்தமான எந்திரம் என்று நினைத்துக்கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User