'பின்னடைவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.!'- தேர்வர்களுக்கு ராதாகிருஷ்ணன் IAS வழங்கிய அறிவுரைகள்

Oct 20, 2026 - 12:30
0
'பின்னடைவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.!'- தேர்வர்களுக்கு ராதாகிருஷ்ணன் IAS வழங்கிய அறிவுரைகள்

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.

'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற அக்டோபர் 25-ம் தேதி சென்னை, எழும்பூர், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

upsc \ tnpsc
upsc \ tnpsc

இந்த நிகழ்வில் Dr. ஜெ.ராதாகிருஷ்ணன், IAS தலைவர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , Dr. P.விஜயகுமார், IPS இணை ஆணையர், பெருநகர சென்னை தெற்கு (சட்டம் & ஒழுங்கு), Dr. சத்யஸ்ரீ பூமிநாதன் இயக்குநர், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி, திரு.ஆதில் பெய்க் சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.

இந்நிலையில் Dr. ஜெ.ராதாகிருஷ்ணன், IAS-யை தொடர்புக்கொண்டு பேசினோம். அரசு தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், " தேர்வர்கள் தேர்ந்தெடுத்த பணியில் சேர விரும்புவது ஏன் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்ச்சி பெறுவதைக் கடந்து, அப்பணியின் பொறுப்புகளையும் சமூகத்திற்குச் சேவையாற்றும் வாய்ப்பையும் உணர வேண்டும். சவாலான காலங்களில் இந்த நோக்கமே உங்கள் முயற்சியைத் தொடர உதவும். பாடத்திட்டத்தைக் கவனமாகப் படித்து, தேர்வு முறை, மதிப்பீட்டு முறை, ஒவ்வொரு கட்டத்தின் தேவைகள் ஆகியவற்றை தேர்வர்கள் அறிந்துகொள்ளுங்கள். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை ஆராய்ந்து, அவற்றை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யுங்கள்.

UPSC / TNPSC
UPSC / TNPSC

தேர்வு முறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கும் தயாராக இருங்கள். விருப்பப் பாடம் உள்ள தேர்வுகளில், உங்கள் ஆர்வம், புரிதல், தொடர்ந்து படிக்கக்கூடிய திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பாடத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பலம், கிடைக்கும் நேரம், மேம்படுத்த வேண்டிய பகுதிகள் ஆகியவற்றுக்கு ஏற்ப தயாரிப்புத் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.

சுருக்கமான குறிப்புகளைத் தயாரித்து, உரிய இடைவெளிகளில் மீள்பார்வை செய்யுங்கள். எத்தனை நூல்களைச் சேகரித்தீர்கள் என்பதைக் காட்டிலும், படித்தவற்றை எவ்வளவு புரிந்துகொண்டு, நினைவுகூர்ந்து, பயன்படுத்த முடிகிறது என்பதே முக்கியம். தோல்விக்கு அஞ்சாமல் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Dr. ஜெ.ராதாகிருஷ்ணன், IAS
Dr. ஜெ.ராதாகிருஷ்ணன், IAS

பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று, மாற்ற வேண்டியவற்றை நேர்மையாக மதிப்பிடுங்கள். உயர்ந்த இலக்குகளைக் கொள்ளுங்கள். ஒழுங்குடனும் விடாமுயற்சியுடனும் தயாராகுங்கள். பின்னடைவுகளை மனஉறுதியுடன் எதிர்கொள்ளுங்கள். தேர்ச்சி ஒரு வாயிலைத் திறக்கும்; அதன் பிறகு நீங்கள் ஆற்றும் பங்களிப்பை உங்கள் நற்பண்பும் திறமையும் அர்ப்பணிப்புமே தீர்மானிக்கும்" என்று தன் அனுபவப் பகிர்வுகளை வழங்கினார்.

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இது போன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம், எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

LINK : நீங்களும் ஆகலாம் IAS - UPSC/TNPSC வழிகாட்டி

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User