``தேசிய அளவிலான அங்கீகாரம்; பெருமை கொள்கிறோம்" - தங்கமயில் ஜுவல்லரி

Oct 12, 2026 - 22:30
0
``தேசிய அளவிலான அங்கீகாரம்; பெருமை கொள்கிறோம்" - தங்கமயில் ஜுவல்லரி

தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெற்றிருக்கும் நமது தங்கமயில் ஜுவல்லரி. சில சாதனைகள் மட்டுமே ஒரு நிறுவனத்தின் பயணத்தில் சிறப்புமிக்க அத்தியாயங்களாக பெயர் பெறுகின்றன. இன்று தங்கமயில் ஜுவல்லரி அத்தகைய தருணத்தை பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. புகழ்பெற்ற Indian International Jewellery Awards விருது விழாவில், “National Jewellery Retailer of the Year” என்ற மதிப்புமிக்க தேசிய விருதைப் பெறுவதில் தங்கமயில் ஜுவல்லரி பெருமை கொள்கிறது. இந்தனை ஒரு விருதாக மட்டுமின்றி, தங்கமயில் குடும்பத்தின் சிறந்த செயலாற்றலின் தேசிய அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

தங்கமயில் ஜுவல்லரி
தங்கமயில் ஜுவல்லரி

தங்கமயிலில் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு, சிறப்பை இலக்காகக் கொண்டு, வாடிக்கையாளர்களின் உறவுகளைப் பெற்று, நகை விற்பனைத் துறையில் தொடர்ந்து புதிய உயரங்களை நோக்கிப் பயணித்த நிறுவனத்தின் புதிய சாதனை.

மதுரையின் மண்ணில் வேரூன்றிய தங்கமயில் ஜுவல்லரி, இன்று தமிழகம் முழுவதும் தனது தடத்தைப் பதித்து வளர்ந்து நிற்கிறது. காலம் மாறினாலும், தலைமுறைகள் கடந்தும், தங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும், நகைகளுடன் இணைந்திருக்கும் உணர்வுகள் என்றுமே மாறுவதில்லை.

ஒவ்வொரு சிறப்புமிக்க தருணங்களிலும் தங்க நகைகள் என்றுமே நினைவு சின்னமாக திகழ்கின்றன. அதனை புரிந்துகொண்டு, ஒவ்வொரு வாடிக்கையாளரின் வாழ்க்கைத் தருணங்களோடும் இணைந்து பயணிப்பதே தங்கமயிலின் தனித்துவம். ஒவ்வொரு நகை, ஒவ்வொரு வரவேற்பு, ஒவ்வொரு கொண்டாட்டம்,  ஒவ்வொரு உறவு இவை அனைத்தும் இணைந்தே தங்கமயிலின் மிளிரும் ஆண்டுகளை உருவாக்கியுள்ளன. அந்தப் பயணத்திற்கே இன்று, இந்த தேசிய அளவிலான மதிப்புமிகு அங்கீகாரம். தமிழகத்தின் வேர்களிலிருந்து தேசிய மேடை வரை தங்கமயில் ஜுவல்லரியின் வளர்ச்சிப் பயணம் என்பது தொலைநோக்குப் பார்வை, விடாமுயற்சி மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

தங்கமயில் ஜுவல்லரி
தங்கமயில் ஜுவல்லரி

இன்று பல்வேறு நகரங்கள், மாவட்டங்களில் வாடிக்கையாளர்களை சென்றடையும் விரிவான நகை விற்பனை வலையமைப்பாக வளர்ந்து, காலத்தின் மாற்றங்களையும், வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், நவீன மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டபோதிலும், தரம், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் முன்னுரிமை போன்ற அடிப்படை மதிப்புகளில் தங்கமயில் ஒருபோதும் மாற்றங்களின்றி செயல்படுகிறது.

பாரம்பரியத்தின் பெருமையைப் பிரதிபலிக்கும் மணப்பெண் நகைகளிலிருந்து, புதிய தலைமுறையின் நவீன வடிவமைப்புகள் வரை — ஒவ்வொரு படைப்பிலும் பாரம்பரியத்தையும் புதுமையையும் சமநிலைப்படுத்தி வருகிறது.

எனவே, இன்று கிடைத்திருக்கும் உயரத்தை அடைய கடந்து வந்த ஒவ்வொரு மாற்றங்களையும், வெற்றிக்கு வழிவகுத்த வாடிக்கையாளர்களையும் கொண்டாடுகிறது. இந்த விருதிற்குப் பின்னணியில் — எண்ணற்ற நம்பிக்கைக் கதைகள் உள்ளது. திருமணத்திற்கான நகையைத் தேர்ந்தெடுக்க வந்த குடும்பம். தங்கள் பிள்ளையின் வாழ்க்கை சிறந்த தருணங்களை கொண்டாடும் வகையில் நகையைத் தேர்ந்தெடுத்த வந்த பெற்றோர்.

தங்கமயில் ஜுவல்லரி
தங்கமயில் ஜுவல்லரி

புதிய வாழ்க்கையின் தொடக்கத்தை அழகாக்கும் தம்பதியர். ஆண்டுதோறும் தங்கமயிலைத் தேடி வரும் குடும்பங்கள். இவை விற்பனைக்கான தருணங்கள் அல்ல. இவை அனைத்தும் நம்பிக்கையினால் உருவான உறவுகள். ஆகையால், இந்த விருது தங்கமயிலுக்கு மட்டுமானதல்ல. தங்கமயிலின் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சொந்தமானது. ஒவ்வொரு நாளும் அதனை சிறந்த அனுபவமாக மாற்றிய எங்கள் ஊழியர்களுக்குச் சேர்ந்தது. எங்கள் வளர்ச்சிப் பயணத்திற்கு துணைநின்ற எங்களின் குடும்ப மற்றும் பங்குதாரர்களுக்குச் சொந்தமானது.

இந்த வெற்றி உங்களுடைய பங்களிப்பின் பிரதிபலிப்பே!தங்கமயில் என்ற பெயரின் வளர்ச்சியில் பங்களித்த, ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. அங்கீகாரத்தின் பெருமை மட்டுமின்றி அதைவிடப் பெரியது பொறுப்பு “National Jewellery Retailer of the Year” என்ற தேசிய அங்கீகாரம், தங்கமயில் குடும்பத்திற்கு அளவற்ற பெருமையை அளிக்கிறது. அதே நேரத்தில், இது ஒரு புதிய பொறுப்பையும் வழங்குகிறது. தரத்தின் அளவுகோலை மேலும் உயர்த்தும் பொறுப்பு. புதுமைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் பொறுப்பு. வாடிக்கையாளர்களுக்கான அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் பொறுப்பு. தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையின் உயர்ந்த தரநிலைகளை தொடர்ந்து நிலைநிறுத்தும் பொறுப்பு.

தங்கமயில் ஜுவல்லரி
தங்கமயில் ஜுவல்லரி

தலைமுறைகளாகப் பெற்ற நம்பிக்கையை, எதிர்கால தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பு. “இந்த அங்கீகாரம், இன்றைய சாதனையில் நின்றுவிடாமல், நாளைய புதிய இலக்குகளை நோக்கி மேலும் வலிமையுடன் பயணிக்க, தங்கமயிலுக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது ” என்றார் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் திரு.பா. ரமேஷ். எங்கள் வேர்கள் என்றும் தமிழகத்தில் தான், ஆனால் கனவுகள் எல்லைகள் தாண்டி விரிவடைந்து கொண்டிருக்கிறது. தேசிய அளவிலான இந்தப் பெருமைமிக்க விருது, தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு நகை நிறுவனமாகத் திகழும், தங்கமயிலின் பயணத்தில் மற்றுமொரு முக்கிய தருணமாக அமைந்துள்ளது.

பயணம் தொடர்கிறது. பார்வை விரிவடைகிறது. பொற்கால அத்தியாயங்கள் இன்னும் பல எழுதப்படவுள்ளது. தங்கமயில் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் — நன்றியுடன் கொண்டாடும் ஒரு வரலாற்றுத் தருணம். தங்கமயில் குடும்பத்தின் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!தங்கம் வாங்க தங்கமயிலுக்கு வாங்க!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User