இந்தியா, ரஷ்யா மீதான வரி: தடை நீக்க 60 நாள் அவகாசம் கேட்கும் அதிபர் ட்ரம்ப்! - காரணம் என்ன?
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீது விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்திருக்கிறார்.
உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கான பயணத்தை தொடங்குவதற்கு முன்பு , அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீது விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய, அதிபர் டொனால்டு ட்ரம்ப் 60 நாட்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்.

உலகப் பொருளாதாரம் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் இத்தகைய முடிவுகள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கணக்கிடவே இந்த அவகாசம் தேவைப்படுகிறது. இந்தியாவைப் போன்ற முக்கிய நட்பு நாடுகள், ரஷ்ய எரிசக்தி இறக்குமதியை ஒரே நாளில் முழுமையாகக் கைவிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. இந்தியா ஏற்கனவே தனது எரிசக்தி தேவைகளைப் பல்வேறு நாடுகளிலிருந்து பெறத் தொடங்கியிருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவிலான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்தே தொடர்ந்து பெற்று வருகிறது.
இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி என்பதால், அனைத்துக் காரணிகளையும் சீர்தூக்கிப் பார்த்து சரியான முடிவை எடுக்க இந்த அவகாசம் அவசியம். சமீபத்தில் மறைந்த குடியரசுக்கட்சி செனட்டர் லிண்ட்சி கிரகாமின் நினைவாகக் கொண்டுவரப்பட்ட 'ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டத்தின்' (SRIA) கீழ், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து முன்னணி நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை சுங்கவரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும், தற்போதைய தேசிய நலனைக் கருத்தில் கொண்டு அதிபர் ட்ரம்ப் இச்சட்டப் பிரிவுகளிலிருந்து தற்காலிக விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க-ஈரான் போர், சவூதி அரேபியா மீதான ஹவுதி அமைப்பினரின் தாக்குதல்கள் மற்றும் உக்ரைன்-ரஷ்ய மோதல் ஆகிய காரணங்களால் உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த 60 நாள் ஆய்வு காலம் மிகவும் தேவைப்படுகிறது." என்றார்.
அமெரிக்காவில் வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, உள்நாட்டு எரிபொருள் விலையைக் குறைக்கும் நோக்கில் ரஷ்யாவிலிருந்து டீசல் இறக்குமதி செய்யப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்தே, இந்தத் தடை விலக்கு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)