'நீங்க 60 வயசு வரைக்கும் ஆடணும் சார்' - SK வுக்கு தோனி சொன்ன பதில் என்ன?

Mar 22, 2026 - 23:01
 0
'நீங்க 60 வயசு வரைக்கும் ஆடணும் சார்' - SK வுக்கு தோனி சொன்ன பதில் என்ன?

'Roar 26' என்ற பெயரில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு நிகழ்வை சேப்பாக்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை அணியின் முன்னாள் வீரர்களுடனான போட்டி, ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி என களைகட்டிய இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டிருந்தார்.

தோனி - சிவகார்த்திகேயன்
தோனி - சிவகார்த்திகேயன்

தோனி உட்பட சென்னை அணியின் வீரர்களுடன் சிவகார்த்திகேயன் கலந்துரையாடினார். சிவகார்த்திகேயன் பேசுகையில், 'தோனி சார் உங்களை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். சேப்பாக்கத்தின் அத்தனை ஸ்டாண்ட்களில் இருந்தும் உங்களை பார்த்திருக்கிறேன். முதன் முறையாக உங்களை இவ்வளவு நெருக்கமாக பார்க்கிறேன். கோடிக்கணக்கான ரசிகர்களை போல எனக்கும் உங்களை பிடிக்கும். உங்களின் தலைமைத்துவம் அத்தனை அபாரமானதாக இருக்கிறது.

வெற்றி தோல்வியை கடந்து ரசிகர்கள் இந்த அணியை ஆதரிப்பதால்தான் இதை ஒரு குடும்பம் என்கிறோம். CSK ஒரு Emotion. அதனால்தான் தோனி மைதானத்துக்குள் வரும் போது அத்தனை ஆர்ப்பரிப்பு. தோனி சார் நீங்கள் நம்பமாட்டீர்கள்...நான் 25 கி.மீ தள்ளி ECR இல் இருக்கிறேன். அங்கு வரைக்கும் உங்களுக்கான ஆர்ப்பரிப்பு கேட்கிறது' என்றார்.

தோனி - சிவகார்த்திகேயன்
தோனி - சிவகார்த்திகேயன்

'

தோனியும் சிவகார்த்திகேயனும் உரையாடுகையில்,

SK :தோனி சார் உங்களிடம் ஒரு முறை ஓய்வு குறித்து கேட்கையில், 'Definitely Not' என்றீர்கள். ஓவ்வொரு சீசனிலும் நீங்கள் அதையே சொல்ல வேண்டும்.

தோனி : அது ரொம்ப கடினம்.

SK : நீங்கள் 60 வயது வரை ஆட வேண்டும்.

தோனி : என்னுடைய பிட்னஸ் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருக்கிறது.

SK : நீங்கள் பிட்டாகத்தான் இருக்கிறீர்கள்

தோனி : I Will Try.

இந்த நிகழ்வுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி சேப்பாக்கத்தை அதிர வைத்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0