வார ராசிபலன்

May 25, 2026 - 08:01
0
வார ராசிபலன்
இந்த வார ராசிபலன் மே 25 முதல் 31 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.

மேஷம்:

மேஷராசி அன்பர்களே!

தேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சிரமம் ஏற்படும். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 27,28

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சந்திராஷ்டமம் : 30 காலை முதல் 31 முழுவதும்

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்

காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

ரிஷபம்:

ரிஷபராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இளைய சகோதரர்களால் உதவி உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் சற்று இழுபறியாகி முடியும்.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர் கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும். கடையை விரிவுபடுத்தத் தேவையான உதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. புகுந்தவீட்டு உறவினர்களிடையே உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் தேவை அறிந்து கணவர் உதவி செய்வார்.

அதிர்ஷ்ட நாள்: 27,30

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: வள்ளி தேவசேனா சமேத முருகக்கடவுள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

மிதுனம்:

மிதுனராசி அன்பர்களே!

வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். ஆனால், இதுவரை பாராமுகமாக இருந்த அதிகாரிகள் கனிவாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். என்றாலும் சலிப்படை யாமல் செய்வீர்கள். கணவர் மற்றும் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து அவர் களை மகிழ்வித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 27,31

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,

வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,

நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

கடகம்:

கடகராசி அன்பர்களே!

பணவரவுக்குக் குறைவில்லை. ஆனால், அதே சமயம் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். கூடுமானவரை கடன் வாங்காமல் சமாளிக்கப் பார்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உற்சாகம் தரும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். ஆனாலும், கடன் வாங்காமல் சமாளித்துவிட முடியும் என்பது ஆறுதலான விஷயம். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 26,30

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே

சிம்மம்:

சிம்மராசி அன்பர்களே!

பணவரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட லாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே சிறு அள வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும். பிள்ளைகளின் மூலம் பணவர வுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். மற்றவர்களுடன் இணக்க மான சூழ்நிலை நிலவும். கணவரிடம் நீண்டநாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்த பொருள் ஒன்று இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு..

அதிர்ஷ்ட நாள்கள்: 28,31

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும்

சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை,

மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற

கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்றவாறே!

கன்னி:

கன்னிராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவை யற்ற செலவுகள் இல்லை என்பதாலும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித் தாலும் உடனே நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகளை நிகழ்த்தும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் சிறுசிறு வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் பேசும்போது பொறுமை அவசியம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை. வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 27,30

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்

பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை

என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி

அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

துலாம்:

துலாராசி அன்பர்களே!

வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசிய செலவு களாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர் பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறை வேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். இளைய சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறு மையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. பற்று வரவில் சற்று கவன மாக இருப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய பணம் கிடைப்பதால் மனநிறைவு உண் டாகும். புகுந்த வீட்டினரின் பாராமுகமான மனப்பான்மை மாறி, அனுசரணையாக நடந்து கொள்வது உங்களை உற்சாகப்படுத்தும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 26,30

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,

மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த

வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,

உள்ளத்தி னுள்ளே உளன்

விருச்சிகம்:

விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார வசதி நல்லபடியே காணப்படுகிறது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர் களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்குக் குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். புதிய வாடிக்கை யாளர்கள் அறிமுகமாவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். ஆனாலும், உங்கள் சிரமம் அறிந்து கணவர் காட்டும் அன்பும் ஆதரவும் உங்களை சோர்ந்து விடாமல் செயல்படச் செய்யும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்: 26,30

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,

என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்

ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து

அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

தனுசு:

தனுசுராசி அன்பர்களே!

பண வரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் உண்டாகும்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்க மாக நடந்துகொள்வது அவசியம். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடு களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பிறந்தவீட்டு உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடிந்து, புகுந்த வீட்டினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நாள்கள்: 27,29

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுவனே

மகரம்:

மகரராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். ஆனால், எதிர் பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும். வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் உங்கள் பணிகளை ஒப்படைக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை அவசியம்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தியாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடை பெறும். சிலருக்கு பிள்ளைகளால் ஆதாயம் கிடைக்கும். கணவருடன் வாக்குவாதம் செய்யாமல் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

அதிர்ஷ்ட நாள்: 28,30

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

சந்திராஷ்டமம் : 25 பகல் வரை

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம்தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

கும்பம்:

கும்பராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்த வர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சி கள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். சிலருக்கு நீண்டநாள்களாக தடைப்பட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.

வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவை யான கடனுதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிகரிக்கும் செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும். வாரப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நிலைமை சரியாகும். கணவரின் மூலம் பணவரவுக்கான வாய்ப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 28,30

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9

சந்திராஷ்டமம் : 25 பகல் முதல் 26,27 இரவு வரை

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நிழலார் சோலை நீல வண்டினம்

குழலார் பண் செய் கோலக் காவுளான்

கழலால் மொய்த்த பாதம் கைகளால்

தொழலார் பக்கம் துயரம் இல்லையே

மீனம்:

மீனராசி அன்பர்களே!

பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படு வதற்கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு பாராட்டு வார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் பொறுமையாக இருப்பது நல்லது. தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும். சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். தேவைக்கும் அதிகமாகப் பணம் கிடைப்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். சகோதரர்கள் உங்கள் தேவை அறிந்து செய்யும் உதவி மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 25,31

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

சந்திராஷ்டமம் : 27 இரவு முதல் 28,29,30 காலை வரை

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து

செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே

நைவனாயேன் உந்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்

வையம் முன்னே வந்து நல்காய் வலிவல மேயவனே

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User