"திமுக, அதிமுக இணைவதில் எங்களுக்கு பிரச்னை இல்லை" - மு.வீரபாண்டியன் சொல்லும் காரணம் என்ன?

Jul 06, 2026 - 10:31
0
"திமுக, அதிமுக இணைவதில் எங்களுக்கு பிரச்னை இல்லை" - மு.வீரபாண்டியன் சொல்லும் காரணம் என்ன?

நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் 'மார்க்ஸ் மாமணி விருது' விருதை பெற்றார்.

அதன் பிறகு, அந்த விழாவில் அவர் பேசியதாவது...

"தமிழக அரசியல் சூழலில், யாரும் எதிர்பாராத சூழலில் தவெக வெற்றி பெற்றபோது, அவர்கள் ஆட்சி அமைக்க இடதுசாரிகளையும் விடுதலை சிறுத்தைகளையும் அணுகினார்கள்.

திமுக, அதிமுக இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவை ஜனநாயக இயக்கங்கள்.

எனவே அவை எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

திருமாவளவன் - மு.வீரபாண்டியன்
திருமாவளவன் - மு.வீரபாண்டியன்

திமுக அல்லது அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லாத சூழலில், ஒரு ஜனநாயக சக்திக்கான வாய்ப்பை நாம் மறுத்துவிட்டால், அது ஆளுநர் போன்றவர்கள் மக்கள் அதிகாரத்தின் மீது அமர்வதற்கு வழிவகுத்துவிடும் என்கிற வரலாற்றுப் பழியைத் தவிர்க்கவே ஆழமாக விவாதித்து இந்த அரசியல் முடிவை எடுத்தோம்.

மக்கள் முன்மொழிந்ததை நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம். இதில் தனிப்பட்ட நிபந்தனை என்று எதுவுமில்லை, முழுக்க முழுக்க இது அரசியலாக எடுக்கப்பட்ட முடிவு.

ஆளுநர் காய் நகர்த்துவதைத் தடுத்து, ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

எங்கள் ஆதரவிற்கு நிபந்தனை என்று ஒன்று இருக்குமானால், அது மதச்சார்பின்மை மட்டுமே.

இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் மதச்சார்பின்மையே அடிப்படை.

அதைச் சிதைக்கப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தான் எங்கள் முதன்மையான அரசியல் பகை.

அவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதே எங்களின் கடும் முயற்சி.

ஜனநாயகத்தில் வெற்றியையும் தோல்வியையும் சமமாக மதிக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்றவர்களை எள்ளி நகையாடக் கூடாது".

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User