Whatsapp-ல் நமக்கு நாமே மெசேஜ் செய்யலாம்! - இது தெரியாமப் போச்சே?! - 7

Mar 29, 2026 - 12:01
 0
Whatsapp-ல் நமக்கு நாமே மெசேஜ் செய்யலாம்! - இது தெரியாமப் போச்சே?! - 7

வாட்ஸ்அப் செயலியில், நமக்கே நாம் மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் ‘Message Yourself’ வசதி இருப்பது தெரியுமா?

மளிகை சாமான்கள், மருந்துகள், அல்லது வேறு ஏதேனும் முக்கியக் குறிப்புகள் போன்றவற்றை அவரவர் துணைவரின் வாட்ஸ்அப்புக்கு அனுப்புகிறவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவர்களின் தேவையை உணர்ந்துதான் வாட்ஸ்அப் இந்த வசதியைக் கொண்டு வந்தது.

Whatsapp
Whatsapp

2022-ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இந்த ‘Message Yourself’ அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியது. வாட்ஸ்அப்பிற்கு முன்பே, டெலிகிராமில் Saved Messages என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்தது.

  • மொபைலில் இருந்து லேப்டாப்பிற்கு ஏதாவது கோப்புகளை எளிதாக மாற்ற ஈமெயிலையோ அல்லது பிற கிளவுட் சேவைகளோ தேவையில்லை. உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்து நொடியில் எடுத்துக்கொள்ளலாம்.

  • பிற குரூப்கள் அல்லது சாட்களில் வரும் முக்கிய தகவல்கள் காணாமல் போய்விடும் என நினைத்தால், அதை உடனே உங்கள் சாட்டிற்கு ஃபார்வர்டு செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம் (இது 2GB வரையிலான டாகுமெண்ட்களை அனுமதிக்கும்).

  • இது உங்களுடைய சொந்த சாட் என்பதால், மற்ற மெசேஜ்களைப் போலவே இதுவும் End-to-End Encryption மூலம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. வேறு யாராலும், வாட்ஸ்அப் நிறுவனத்தால் கூட, இந்த மெசேஜ்களைப் படிக்க முடியாது.

  • உங்கள் பயன்பாட்டை மேலும் எளிதாக்க, ‘Message Yourself’`-ஐ Pin' செய்து வைத்துக்கொண்டால் வாட்ஸ்அப்பைத் திறந்தவுடனேயே எப்போதும் முதல் சாட்டாக உங்கள் டிஜிட்டல் நோட்பேட் கிடைக்கும்.

Whatsapp
Whatsapp

வாட்ஸ்அப்பில் புதிய சாட் ஐகானைக் கிளிக் செய்தால் Contact List திரையில் தோன்றும். ஆரம்பத்திலேயே, உங்கள் பெயர் அல்லது மொபைல் எண்ணுக்குப் பக்கத்தில் 'Message yourself' என்று இருப்பதைப் பார்க்கலாம்.

இதுவரை இந்த வசதியைப் பயன்படுத்தாதாவர்கள் உடனே உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பி இன்றே ஆரம்பியுங்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0