திருச்சி: நகைக்கடையில் ரூ. 12 லட்சம் மோசடி; இளைஞரைத் தேடும் போலீஸ்; பின்னணி என்ன?

Nov 23, 2026 - 08:30
0
திருச்சி: நகைக்கடையில் ரூ. 12 லட்சம் மோசடி; இளைஞரைத் தேடும் போலீஸ்; பின்னணி என்ன?

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது போஸ் (வயது: 37). இவர், திருச்சி- கரூர் பைபாஸ் ரோட்டில் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் கிளை மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இதேபோல, திருச்சி மேற்கு கரூர் எல்.பி.ஜி. நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கார்த்திகேயன் முகமது போஸ் வேலை செய்யும் கடையில் இருந்து தங்க நகைகளை வாங்கி அதனைத் தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். மேலும், அதில் வரும் பணத்தை முகமது போஸிடம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

trichy
trichy

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி கார்த்திகேயன், முகமது போஸ் வேலை செய்யும் கடையிலிருந்து ரூ. 56,67,391-க்கு தங்க நகைகளை வாங்கியுள்ளார். தங்க நகைகளை வாங்கிய கார்த்திகேயன் அதனை கரூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

பின்னர், விற்பனை செய்த பணத்திலிருந்து முகமது போஸுக்கு ரூ. 44,66,000 மட்டுமே செலுத்தி உள்ளார். நகையை விற்பனை செய்த பணத்திலிருந்து மீதமுள்ள ரூ. 12,01,391-யைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது போஸ், இது குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனைத் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User